

பிரேசில் நிறுவனத்திடமிருந்து விமானம் வாங்கியதில் ஊழல் நடந்ததாகக் கூறப்படும் புகார் குறித்து சிபிஐ ஆய்வு செய்து வருகிறது.
இதுகுறித்து சிபிஐ வட்டாரத் தினர் கூறும்போது, “பாதுகாப்பு அமைச்சகத்தின் கோரிக்கையை ஏற்று எம்பரர் நிறுவனத்திடமிருந்து விமானங்களை வாங்கியது தொடர் பான ஆவணங்களை ஆய்வு செய்து வருகிறோம். புகார் தொடர்பாக போதுமான ஆதாரம் இருப்பது தெரியவந்தால் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விசாரணை தொடங்கப்படும். இல்லாவிட்டால் போதுமான ஆதாரங்களை திரட்ட முதற்கட்ட விசாரணை நடத்தப் படும்” என்றனர்.
கடந்த 2008-ம் ஆண்டு பாது காப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனம் (டிஆர்டிஓ) ரூ.1,400 கோடி மதிப்பில் 3 ராணுவ கண் காணிப்பு விமானங்களை வாங்க பிரேசில் நாட்டின் எம்பரர் நிறுவனத் துடன் ஒப்பந்தம் செய்தது.
இந்நிலையில், இந்தியா, சவுதி அரேபியா அரசுகளிடமிருந்து விமான ஒப்பந்தங்களைப் பெறு வதற்காக எம்பரர் நிறுவனம் இடைத்தரகர் மூலம் லஞ்சம் வழங்கியதாக பிரேசில் நாளிதழில் செய்தி வெளியானது.
இதுபற்றி விசாரணை நடத்து மாறு சிபிஐ, அமலாக்கப் பிரிவை பாதுகாப்பு அமைச்சகம் கேட்டுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.