

உத்திரப் பிரதேசம் மாநிலம் பிரோசாபாத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களை கொடூரமாக தாக்கிய காவல் உயர் அதிகாரி உள்பட 4 போலீஸ்காரர்களை பணி இடைநீக்கம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் பிரோசாபாத் தேசிய நெஞ்சாலையில் நிகழ்ந்த விபத்தில் இருவர் உயிரிழந்தனர். விபத்தை ஏற்படுத்திய டிராக்டர் வாகன ஓட்டுநரை போலீசார் தப்ப விட்டதாக புரளி கிளம்பியதை அடுத்து காவல் துறையினரை கண்டித்து பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
போராட்டக்காரர்களை விரட்டுவதற்காக போலீசார் தடியடி நடத்தியுள்ளனர். இதேபோல் போராட்டத்தில் ஈடுபட்ட ஏராளமான பெண்களை போலீசார் கொடூரமாக தாக்கியுள்ளனர். இந்த காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன. சிசிடிவி வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு மகளிர் அமைப்புகளின் கண்டனத்தையும் ஈர்த்துள்ளது.
தாக்குதலில் ஈடுபட்ட காவலர்கள் பிரகாஷ் யாதவ், சஞ்ஜீவ் குமார், நீரஜ், கிரிராஜ் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.