

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று மக்களவையில் அதிமுகவின் ஓ.பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்) அணியைச் சேர்ந்த எம்.பி. பி.ஆர்.சுந்தரம் நேற்று வலியுறுத்தினார்.
இதுகுறித்து அவர் பேசும்போது, “ஜெயலலிதாவின் மர்ம மரணம் குறித்து தமிழக அரசு விசாரணைக்கு உத்தரவிட்டால் மறைக்கப்பட்ட விஷயங்கள் வெளியே வராது. எனவேதான் நாங்கள் சிபிஐ விசா ரணை கோருகிறோம்” என்றார்.
அதிமுகவின் மற்றொரு உறுப் பினர் பி.வேணுகோபால் பேசும் போது, “இலங்கையில் தமிழர் படுகொலை தொடர்பாக அந்நாட்டு அரசு அறிக்கை அளிக்க ஐ.நா. மனித உரிமை ஆணையம் மேலும் 2 ஆண்டுகள் அவகாசம் அளித்துள்ள விவகாரத்தில் இந்தியா மவுனம் காப்பது கண்டிக்கத்தக்கது. இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான அட்டூழியங்கள் குறித்து சர்வதேச விசாரணை நடத்த வேண்டும்” என்றார்.
இதற்கு நாடாளுமன்ற விவ காரங்கள் துறை அமைச்சர் அனந்த குமார் பதில் அளிக்கும்போது, “இலங்கையில் தமிழர்கள் பாது காப்பு ஒரு முக்கிய பிரச்சினையா கும். உறுப்பினரின் கவலை வெளி யுறவு அமைச்சர் சுஷ்மாவிடம் தெரிவிக்கப்படும். இலங்கையில் தமிழர்களின் நலன்களை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.