

போபாலில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கல்வி நிறுவனத்தில் (எய்ம்ஸ்) நேற்று நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி.நட்டா வந்திருந்தார்.
விழா முடிந்து திரும்பும் போது, நுழைவு வாயில் அருகே மாணவர்கள் ஒன்று திரண்டு கல்லூரியில் அடிப்படை வசதி கள் இல்லாதது உள்ளிட்ட பல் வேறு பிரச்சினைகளை வலியு றுத்தி அமைச்சரின் காரை முற்றுகையிட்டனர்.
மாணவர் கூட்டத்தைக் கடந்து அமைச்சரின் வாகனம் வெளியே புறப்பட்டுச் சென்றபோது அமைச்சர் நட்டா மீது அடையாளம் தெரியாத நபர் மை வீசினார். இதில், நட்டாவின் குர்தாவில் சில சொட்டு மை விழுந்தது. மை வீசியவர் யார் என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
போபால் எய்ம்ஸ் கல்லூரியில் 3-ம் ஆண்டு எம்பிபிஎஸ் படிக்கும் மாணவர் ரிஷி பிரேம் கூறும்போது, ‘மாணவர்கள் யாரும் மை வீசவில்லை. அடிப்படை கட்டமைப்பு வசதிகள் கேட்டு நாங்கள் அமைதியான முறை யில் போராடினோம்.
கல்லூரியை மேம்படுத் துவது குறித்து அமைச்சருடன் பேசவே நாங்கள் முயன்றோம். அமைச்சரின் கார் பலவந்தமாக கூட்டத்தை இடித்துக்கொண்டு வெளியேறியதில், 2 மாணவர் களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது’ என்றார்.