

வங்கக் கடலில் உருவாகியுள்ள 'ஹெலன்' புயலால் தமிழகத்துக்கு பாதிப்பு இல்லை என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
நாளை கரையை கடக்கிறது: 'ஹெலன்' புயல் ஆந்திர மாநிலத்தை நோக்கி நகர்ந்ததால், தமிழகத்தில் மழைக்கும் வாய்ப்பில்லை என்றும், மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லலாம் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
மேலும் புயல், ஆந்திரப் பிரதேசம் நோக்கி நகர்ந்து நாளை (வெள்ளிக்கிழமை) மதியம் ஓங்கோல் அருகே நெல்லூர்-மசூலிப்பட்டினம் அருகே கரையை கடக்கும் என்றும் அறிவித்துள்ளது. புயல் கரையைக் கடக்கும் போது மணிக்கு 100 முதல் 110 கி.மீ. வேகத்தில் காற்று வீசும்.கடலோர ஆந்திராவில் பலத்த காற்றுடன் கனமழையும், ராயலசீமா அதனை ஒட்டியுள்ள தமிழக பகுதியிலும் கனமழையும் பெய்யும் என அறிவித்துள்ளது.