சஹாரா சொத்துகளை விற்க உச்சநீதிமன்றம் தடை

சஹாரா சொத்துகளை விற்க உச்சநீதிமன்றம் தடை
Updated on
1 min read

முதலீட்டாளர்களுக்கு ரூ.24 ஆயிரம் கோடியை திருப்பி அளிப்பது தொடர்பான வழக்கில், சஹாரா குழுமத் தலைவர் சுப்ரதா ராய் மற்றும் 3 இயக்குநர்கள் நாட்டை விட்டு வெளியேற உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. மேலும், சஹாரா குழுமங்களின் எந்த சொத்துகளையும் விற்கக் கூடாது எனவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. சஹாரா குழுமம் ரூ. 20 ஆயிரம் கோடி மதிப்பிலான சொத்துப்பத்திரங்களை பங்கு பரிவர்த்தனைக் கட்டுப்பாட்டு அமைப்பிடம் (செபி) ஒப்படைக்க உத்தரவிட்டிருந்தது. இதை சஹாரா குழுமம் நிறைவேற்றவில்லை.

இதையடுத்து நீதிபதிகள் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், ஜே.எஸ்.கேஹர் ஆகியோரடங்கிய அமர்வு, சஹாரா குழுமத் தலைவர் சுப்ரதா ராய், சஹாரா குழும இயக்குநர்கள் அசோக் ராய் சௌத்ரி, ரவிசங்கர் துபே மற்றும் வந்தனா பார்கவா ஆகியோர் நாட்டை விட்டு வெளியேறக் கூடாது என வியாழக்கிழமை உத்தரவிட்டது. மேலும், சஹாரா குழுமத்தைச் சேர்ந்த எந்தவொரு நிறுவனத்தின் சொத்துகளை விற்கவும் தடை விதித்துள்ளது. வழக்கு விசாரணை வரும் டிச. 11 க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in