

உத்தரப் பிரதேசம், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர்களான குலாம் நபி ஆசாத் மற்றும் கமல்நாத் ஆகிய இருவரும் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளனர்.
மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவராக உள்ள ஆசாத், உத்தரப் பிரதேச மாநில பொறுப்பாளராக செயல்படுவார். பஞ்சாப் மற்றும் ஹரியாணா மாநில பொறுப்பாள ராக கமல்நாத் செயல்படுவார் என காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ஜனார்தன் துவிவேதி தெரிவித்தார்.
இதுவரை உ.பி. மாநில பொறுப் பாளராக இருந்துவந்த மதுசூதன் மிஸ்திரி, மத்திய தேர்தல் குழு பொதுச் செயலாளராக நியமிக்கப் பட்டுள்ளார். பஞ்சாப், ஹரி யாணா மாநில பொறுப்பாளராக இருந்த ஷகீல் அகமது அப்பதவியி லிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.