‘தடுப்புக் காவலில் உள்ளவர்களுக்கு வாக்குரிமை மறுக்கக் கூடாது’: தேர்தல் ஆணையம் கண்டிப்பு

‘தடுப்புக் காவலில் உள்ளவர்களுக்கு வாக்குரிமை மறுக்கக் கூடாது’: தேர்தல் ஆணையம் கண்டிப்பு
Updated on
1 min read

தேர்தல் காலங்களில் அரசியல் எதிரிகள் மீது தடுப்புக் காவல் சட்டம் தவறாக பயன்படுத்தப் படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், தடுப்புக் காவலில் உள்ளவர்களுக்கு வாக்குரிமை மறுக்கக் கூடாது என ஜார்க்கண்ட் அரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

ஜார்க்கண்டில் வரும் 25-ம் தேதி தொடங்கி 5 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், சில அரசியல் கட்சிகளின் முக்கிய தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களை போலீஸார் கைது செய்துள்ளதாக தேர்தல் ஆணையத்திடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, ஜார்க்கண்ட் தலைமைச் செயலாளருக்கு தேர்தல் ஆணையம் எழுதி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

தடுப்புக் காவலில் வைக்கப்பட் டுள்ளவர்கள் அஞ்சல் வழியில் வாக்களிக்க மக்கள் பிரதிநிதித் துவ சட்டம் பிரிவு 62(5), தேர்தல் நடத்தை விதிமுறைகள் ஆகியவற்றில் குறிப்பிடப்பட்டுள் ளதை நினைவுபடுத்த விரும்பு கிறோம்.

இதன்படி, தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளவர்களின் பெயர், முகவரி, வாக்காளர் எண் ஆகியவற்றை சம்பந்தப்பட்ட தொகுதியின் தேர்தல் அதிகாரிக்கு அரசு நிர்வாகத்தினர் தெரிவிக்க வேண்டும். அப்போதுதான் அந்த வாக்காளருக்கு அஞ்சல் மூலம் வாக்குச் சீட்டை அனுப்பி வைக்க முடியும்.

மேற்கண்ட நடைமுறைகளை செயல்படுத்துவதற்கு சம்பந்தப் பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இந்த உத் தரவை கண்டிப்பாக நடை முறைப்படுத்த வேண்டும். எந்தக் காரணத்துக்காகவும் இந்த விதிமுறைகளை பின்பற்றத் தவறக் கூடாது.

ஒருவேளை தேர்தல் அதி காரியின் முகவரியோ, தடுப்புக் காவலில் உள்ள வாக்காளரின் தொகுதியோ தெரியாத பட்சத்தில் அதுகுறித்து தலைமை தேர்தல் அதிகாரிக்கு இந்த விவரங்களை அனுப்பி வைக்க வேண்டும் என அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in