

ஆதார் பே, வர்த்தகர்களுக்கான ஆதார் அட்டை மூலம் பணம் பெறும் வசதி. இது விரைவில் அமல்படுத்தப்பட உள்ளது. டெபிட் கார்டு மற்றும் இ-வாலட் இல்லாத வாடிக்கையாளர்களிடமிருந்து பணம் பெறுவதற்கு இது உதவும்.
சிறப்புப் புலனாய்வுக் குழு பரிந்துரையின்படி (எஸ்ஐடி) ரொக்கப் பரிவர்த்தனை ரூ. 3 லட்சம் வரை மட்டுமே அனுமதி. இதற்கு மேலான தொகை காசோலை உள்ளிட்ட பணமற்ற பரிவர்த்தனை மூலமே மேற்கொள்ளப்பட வேண்டும்.
`பீம்’ திட்டத்தை சிறப்பாக பயன்படுத்த இரண்டு புதிய திட்டங்களை அரசு அறிமுகப்படுத்த உள்ளது. யுபிஐ, யுஎஸ்எஸ்டி, ஆதார் பே, ஐஎம்பிஎஸ் மற்றும் டெபிட் கார்டு மூலம் 2017-18-ம் நிதி ஆண்டில் 2,500 கோடி டிஜிட்டல் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள இலக்கு நிர்ணயம்.
ரொக்கமில்லா பரிவர்த் தனையை ஊக்குவிக்க அனைத்து இறக்குமதி செய்யப்படும் பிஓஎஸ் எந்திரங்கள், கைரேகை பதிவு கருவிகள் உள்ளிட்ட அனைத்து கருவிகளுக்கும் அனைத்து வரியி லிருந்து விலக்கு.அரசியல் கட்சி கள் நன்கொடைகளை காசோலை மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனை மூலம் பெற நடவடிக்கை.