கிழக்கு டெல்லியில் துப்புரவுப் பணியாளர் வேலைநிறுத்தப் போராட்டம்: குவியும் குப்பையை அகற்றுமா ஆம் ஆத்மியின் துடைப்பம்?

கிழக்கு டெல்லியில் துப்புரவுப் பணியாளர் வேலைநிறுத்தப் போராட்டம்: குவியும் குப்பையை அகற்றுமா ஆம் ஆத்மியின் துடைப்பம்?
Updated on
2 min read

துப்புரவுப் பணியாளர்கள் வேலை நிறுத்தம் தொடர்வதால் கிழக்கு டெல்லியில் டன் கணக்கில் குப்பை குவிந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் மிகுந்த அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

15 மாவட்டங்களை கொண்ட டெல்லி, 5 மாநகராட்சிகளாக பிரிக் கப்பட்டுள்ளது. இதில் கிழக்கு டெல்லி மாநகராட்சியில் பணி யாற்றும் சுமார் 17,000 துப்புரவுப் பணியாளர்களுக்கு கடந்த 3 மாதங் களாக ஊதியம் வழங்கப்பட வில்லை. இதற்கு தொடர்ந்து கவலை தெரிவித்து வந்த துப்புரவுப் பணியாளர் சங்கத்தினர் கடந்த வெள்ளிக்கிழமை முதல் காலவரம் பற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட் டுள்ளனர். கிழக்கு டெல்லியில் தினமும் சுமார் 2,500 டன் குப்பை கள் அகற்றப்படுவது வழக்கம். இந்நிலையில் இங்கு தற்போது 10 ஆயிரம் டன்னுக்கும் மேல் குப்பை கள் சேர்ந்துள்ளன.

டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏக்கள் 4 பேரின் வீடு கள் முன்பு குப்பைகளை குவித்தும் துப்பரவுப் பணியாளர்கள் போராட் டம் நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து துப்புரவுத் தொழி லாளர் சங்கத்தின் தலைவர் சஞ்சய் கெல்லோட் ‘தி இந்து’விடம் கூறும்போது, “மாநகராட்சி விதிகளின்படி துப்புரவுத் தொழி லாளர்களுக்கு முதலில் ஊதியம் வழங்கப்பட வேண்டும். ஆனால் மீதம் உள்ள தொகையில் கடைசியாக வழங்கி வந்த அதிகாரிகள், அதையும் கடந்த 3 மாதங்களாக நிறுத்தி விட்டனர். இதற்கு ரூ.1600 கோடி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகக் காரணம் கூறுகின்றனர். இவர்கள் மாநகராட்சிக்கு வரவேண்டிய வரிகளை முறையாக வசூல் செய்யாமல் அதன் சுமையை எங்கள் மீது சுமத்துகின்றனர். கடந்த 2 ஆண்டுகளில் 5-வது முறையாக வேலைநிறுத்தம் நடைபெறுகிறது. இந்தப் பிரச்சினையில் உச்ச நீதிமன்றமும் கடந்த அக்டோபரில் தலையிட்டு ஆம் ஆத்மி அரசை கண்டித்தது. தற்போது எங்களில் ஒரு சிறுபகுதியினரை ஏமாற்றி வேலைநிறுத்தத்தை டெல்லி அரசு வாபஸ் பெற வைத்துள்ளது. என் றாலும் பெரும்பாலானோர் போராட் டத்தை தொடர்கிறோம்” என்றார்.

மத்திய அரசு - டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் இடையே நிகழும் மோதலில் இந்தப் பிரச் சினையும் ஒன்றாகக் கருதப்படு கிறது. இதற்கு கிழக்கு டெல்லி மாநகராட்சி நிர்வாகம் பாரதிய ஜனதா வசம் இருப்பதும் காரணம் எனக் கருதப்படுகிறது. நடப்பு நிதி யாண்டில் நாட்டின் எந்த மாநகராட் சிக்கும் இல்லாத அளவில் கிழக்கு டெல்லி மாநகராட்சிக்கு டெல்லி அரசு நிதி ஒதுக்கியதாக துணை முதல்வர் மணிஷ் சிசோதியா கூறினார். இவ்வளவு தொகை எப்படி செலவாகிறது எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்தப் பிரச்சினையில் கேஜ்ரிவால், டெல்லியின் 5 மாநகராட்சிகளும் தனது அரசின் நிர்வாகத்தின் கீழ் வரவில்லை எனவும், மத்திய அரசின் கீழ் வருவதாகவும் விளக்கம் அளித்து உள்ளூர் நாளிதழ்களிலும் விளம்பரம் வெளியிட்டுள்ளார்.

இது குறித்து ‘தி இந்து’விடம் டெல்லி மாநில காங்கிரஸ் தலைவர் அஜய் மக்கான் கூறும்போது, “டெல்லியில் தொடர்ந்து மூன்று முறை இருந்த எங்கள் ஆட்சியில் இந்தப் பிரச்சினை எழவில்லை. இப்போதுதான் இது பெரிய பிரச்சினையாகி உள்ளது. மத்திய, மாநில அரசுகளே இதற்கு முழுப்பொறுப்பு. இந்தப் பிரச்சினை தொடர்ந்தால் எங்கள் துணைத் தலைவர் ராகுல் காந்தி இதில் தலையிடுவார்” என்றார்.

டெல்லியின் 5 மாநகராட்சிகளில் 3 மேயர் பதவிகள், பெரும்பாலான கவுன்சிலர் பதவிகள் பாஜக வசம் உள்ளன. காங்கிரஸ் இரண்டாவது இடத்தில் உள்ளது. இவர்களுக்கு இடையிலான அரசியல் கருத்து வேறுபாடும் இப்பிரச்சினைக்கு காரணமாகக் கூறப்படுகிறது. வடக்கு டெல்லி மாநகராட்சியின் துப்புரவுத் தொழிலாளர்களும் நேற்று முதல் வேலை நிறுத்தம் தொடங்கியுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in