

இருநாடுகளுக்கு இடையிலான நிறுத்தப்பட்ட அமைதிப் பேச்சு வார்த்தையை இந்தியாவும், பாகிஸ்தானும் மீண்டும் தொடங்கு வது அவசியம் என, பாகிஸ்தானின் முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் குர்ஷித் கசூரி தெரி வித்துள்ளார்.
அமைதி மற்றும் முன்னேற்றத் துக்கான மையம் சார்பில் டெல்லியில் இந்தியா, பாகிஸ் தான் தொடர்பான கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற கசூரி மேலும் கூறியதாவது:
இரு நாடுகளுக்கு இடை யிலான உறவானது மிகவும் முக்கியமானது. அமைதியைக் கெடுக்கக்கூடிய நிகழ்வுகளை புறந்தள்ளிவிட வேண்டியது அவசியம்.
இந்தியக் கடற்படை முன்னாள் வீரர் குல்பூஷண் ஜாதவுக்கு பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ள விஷயும் வருத்தம் அளிக்கிறது. இதுபோன்ற நடவடிக்கைகள் இருநாடுகளுக்கு இடையிலான உறவைப் பாதிக்கும்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை காஷ்மீர் மாநிலம் நகரில் நடைபெற்ற மக்களவை இடைத் தேர்தலில் நிகழ்ந்த வனமுறையில் 8 பேர் உயிரிழந்தனர். அப்போது தான் ஜாதவ் மரண தண்டனை செய்தியும் இஸ்லாமாபாத்தில் இருந்து வெளியானது.
பாகிஸ்தானுடன் நல்லுறவைப் பேண பிரதமர் நரேந்திர மோடி விரும்புகிறார். அதேநேரம், சர்வ தேச ரீதியில் பாகிஸ்தானை தனிமைப்படுத்த நினைப்பது முடியாத காரியம். இந்த முயற்சியில் இந்தியா வெற்றி பெற்றதாக வைத்துக்கொண்டால் அது எதிர் விளைவுகளையே ஏற்படுத்தும். இவ்வாறு அவர் கூறினார்.