Published : 04 Jan 2016 08:29 AM
Last Updated : 04 Jan 2016 08:29 AM

தீவிரவாதிகளிடம் இருந்து தப்பி தகவல் அளித்த சமையல்காரரை அடித்து உதைத்த போலீஸார்

பஞ்சாப் போலீஸ் எஸ்.பி. சல்வீந்தர் சிங், அவரது நண்பர் ராஜேஷ் வர்மா, சமையல்காரர் மதன் கோபால் ஆகியோர் கடந்த சனிக் கிழமை ஒரு காரில் சென்றுள்ளனர். அந்த காரை தீவிரவாதிகள் வழிமறித்து கடத்தியுள்ளனர்.

அவர்களிடம் இருந்து எஸ்.பி.யும் சமையல்காரரும் தப்பி போலீஸுக்கு தகவல் தெரிவித் துள்ளனர். இதுகுறித்து சமையல் காரர் மதன் கோபால் தி இந்துவிடம் கூறியதாவது:

நாங்கள் காரில் சென்றபோது ராணுவ உடையணிந்த 5 பேர் கை காட்டி காரை நிறுத்தினர். காரை ராஜேஷ் வர்மா ஓட்டினார். காருக் குள் ஏறிய நபர்கள், சல்விந்தர் சிங் கையும் என்னையும் கட்டிப் போட்ட னர். கைகள், கண்களை கட்டி வாயில் துணியால் அடைத்தனர்.

சிறிது தூரம் சென்றபிறகு என்னையும் எஸ்.பி.யையும் கீழே தள்ளிவிட்டனர். அது அடர்ந்த வனப் பகுதி. காட்டில் 2 கி.மீட்டர் நடந்தே சென்று ஒரு கிராமத்தை அடைந் தோம். அந்த கிராம மக்களின் உதவி யுடன் உயர் போலீஸ் அதிகாரி களுக்கு தகவல் தெரிவித்தோம்.

சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் எங்கள் இருவரையும் சர்தார் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்தனர். நான் கூறியதை அவர்கள் நம்ப வில்லை. உள்ளூர் போலீஸாரும் உளவுத் துறை அதிகாரிகளும் என்னை அடித்து உதைத்து துன் புறுத்தினர்.

நான் 40 ஆண்டுகள் போலீஸில் பணியாற்றியுள்ளேன். அதற்கு எனக்கு கிடைத்த பரிசு இது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

போலீஸ் எஸ்.பி. சல்வீந்தர் சிங் குருதாஸ்பூர் எஸ்.பி.யாக பணியாற்றினார். அண்மையில் அவர் வேறு இடத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அவரிடம் மதன் கோபால் ஆடர்லியாக பணி யாற்றி வந்துள்ளார். கடந்த ஆண்டே கோபால் ஓய்வுபெற்று விட்டார். தற்போது ஓராண்டு பணிநீட்டிப்பில் எஸ்.பி.யிடம் அவர் சமையல்காரராக இருந்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x