

டெல்லியில் யானைகள் பராமரிப்பு தொடர்பான புகார்களுக்கு விளக்கம் கேட்டு அவற்றின் உரிமையாளர்களுக்கு மாநில அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
டெல்லியில் தற்போது 6 யானைகள் மட்டுமே தனியாரிடம் உள்ளன. அவற்றின் உரிமையாளர் அல்லது பாகன்களால் இவை வளர்க்கப்பட்டு வருகின்றன. இதற்கு டெல்லி மாநில வனவிலங்கு பாதுகாப்புத் துறை அனுமதி அளித்துள்ளது.
திருமணம் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் இவை பயன்படுத்தப்படுகின்றன. யானைகளை டெல்லி சாலைகளில் கொண்டு செல்லும்போது போக்குவரத்து போலீஸாருக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிப்பதில்லை என புகார் எழுந்தது. இந்த சமயங் களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதால் இவ்வாறு தகவல் தெரிவிப்பதை விதிமுறை யாக கடைபிடிக்க அரசு உத்தர விட்டது.
இந்நிலையில் யானைகளுக்கு முறையாக உணவு வழங்கப் படுவதில்லை, உடல்நலப் பராமரிப்பு செய்யப்படுவதில்லை என தற்போது புகார் எழுந்துள்ளது. இந்தப் புகார்களுக்கு விளக்கம் அளிக்குமாறு யானைகளின் உரிமையாளர் அல்லது பாகன் களுக்கு டெல்லி மாநில வன விலங்கு மற்றும் பாதுகாப்புத் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் இந்த நோட்டீஸுக்கு அளிக்கப்படும் விளக்கத்தில் குறை இருப்பதாக தெரியவந்தால் யானை வளர்ப்பு உரிமம் ரத்து செய்யப்படும் எனவும் எச்சரிக்கப் பட்டுள்ளது.
இது குறித்து டெல்லி யானைப் பாகன்களில் ஒருவரான ஜாக்கீர் அலி (25) கூறும்போது, “யானைகள் வளர்ப்பை நாங்கள் விரும்பி செய்கிறோமே தவிர, அவற்றை காட்சிப் பொருளாக்கி சம்பாதிப்ப தில்லை. ஆனால் டெல்லியில் உள்ள கடுமையான விதிமுறை களால் இவற்றை வளர்ப்பதில் அதிக சிரமம் உள்ளது. என் போன்ற பாகன்களுக்கு சொற்ப ஊதியமே அளிக்கப்படுகிறது. என்றாலும் யானைகள் மீது நாங்கள் காட்டும் பாசம் காரணமாக இப்பணியை செய்துவருகிறோம். இந்த சூழலில் அவற்றை எங்களிடம் இருந்து பிரிக்கும் முயற்சி நடக்கிறது” என்றார்.
கடந்த 2009 வரை டெல்லியில் 24 யானைகள் தனியாரால் வளர்க்கப்பட்டு வந்தன. இதற்காக டெல்லியின் பிரதான பகுதியான ஐ.டி.ஓ. பாலம் அருகில் இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. இது, டெல்லி நகருக்கு வெளியே மாற்றம் செய்யப்பட்ட பின் யானைகளின் எண்ணிக்கை குறைந்து விட்டதாக புகார் எழுந்தது.
இதையடுத்து டெல்லி அரசு சார்பில் கடந்த 2014-ல் யானைகள் குறித்த புள்ளிவிவரம் எடுக்கப் பட்டது. இதில் யானைகளின் வளர்ப்பிடம் மாற்றம் காரணமாக அவை படிப்படியாக அருகிலுள்ள மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் அப்போது 8 யானைகள் மட்டுமே தனியாரிடம் இருப்பதாகவும் தெரியவந்தது. பிறகு இந்த 8-ல் இரு யானைகள் அதன் உரிமையாளர்களால் குஜராத் கொண்டு செல்லப்பட்டன. தற்போது 6 யானைகள் மட்டுமே டெல்லியில் தனியாரிடம் வளர்க்கப்பட்டு வருகின்றன.
தற்போது அளிக்கப்பட்டுள்ள நோட்டீஸுக்கு பின் யானைகள் பறிமுதல் செய்யப்பட்டால், உரிமை யாளர்கள் மீது விலங்குகள் பாது காப்பு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப் படுகிறது. இதில் பறிமுதல் செய் யப்படும் யானைகளின் மறுவாழ்வு சிக்கலாகிவிட வாய்ப்புள்ளது. இவற்றை டெல்லி அரசு பராமரிப்பது சிரமம். தவிர, வீட்டு விலங்காக பழக்கப்பட்ட யானைகளை மீண்டும் காட்டில் விடவும் முடியாது. எனவே, பொது அமைப்புகளால் நடத்தப்படும் விலங்குகள் காப்பகங்களில் தான் ஒப்படைக்க வேண்டி இருக்கும் எனக் கூறப்படுகிறது.