ஊதியக் குழு நிலுவைத் தொகை: ஒரே தவணையாக ஆகஸ்ட்டில் வழங்கப்படும் - மத்திய அரசு அறிவிப்பு

ஊதியக் குழு நிலுவைத் தொகை: ஒரே தவணையாக ஆகஸ்ட்டில் வழங்கப்படும் - மத்திய அரசு அறிவிப்பு
Updated on
1 min read

ஏழாவது ஊதியக் குழு நிலுவைத் தொகை ஒரே தவணையாக ஆகஸ்ட் மாத சம்பளத்தில் வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

நீதிபதி ஏ.கே.மாத்தூர் தலைமையிலான 7-வது ஊதிய கமிஷன் பரிந்துரைகளை அமல் படுத்த மத்திய அரசு அண்மையில் அறிவிக்கை வெளி யிட்டது. அதன்படி ஆகஸ்ட் மாத சம்பளத்தில் மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியர் களுக்கு ஒட்டுமொத்தமாக 23.6 சதவீத ஊதிய உயர்வு கிடைக்கும் என்று மத்திய அரசு தெரி வித்தது.

கடந்த ஜனவரி 1-ம் தேதியை கணக்கிட்டு ஊதிய கமிஷன் பரிந்துரைகள் அமல் செய்யப்பட்டுள்ளன. எனவே நிலுவைத் தொகை பகுதி, பகுதியாகவே வழங்கப்படும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் முதலில் தெரிவித்தன.

இந்நிலையில் நிலுவைத் தொகை முழுவதும் ஒரே தவணை யாக ஆகஸ்ட் மாத சம்பளத்துடன் வழங்கப்படும் என்று மத்திய அரசு நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதனால் நாடு முழுவதும் 47 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும் 53 லட்சம் ஓய்வூதி யர்களும் பலன் அடை வார்கள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in