

காஷ்மீர் மாநிலத்தில் உள்ள அமர்நாத் குகைக் கோயில் தரிசனத்துக்கு திறக்கப்பட்ட 6 நாள் வரை 86 ஆயிரத்துக்கும் மேற்பட்ட யாத்திரிகர்கள் பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர்.
இது தொடர்பாக ஜம்மு காஷ்மீர் அரசின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் ஒருவர் நேற்று காலை கூறும்போது, “அமர்நாத் குகைக்கோயிலில் இதுவரை 86,696 பேர் பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர். 6-ம் நாள் யாத்திரையில் மட்டும் 15,593 யாத்திரிகர்கள் குகைக்கோயிலில் வழிபாடு செய்தனர்” என்றார்.
இந்நிலையில் ஜம்மு, பகவதி நகர் அடிவார முகாமில் இருந்து 1464 ஆண்கள், 262 பெண்கள், 141 சாதுக்கள் உட்பட 1867 பேர் நேற்று புறப்பட்டனர். நேற்றுடன் ஜம்மு அடிவார முகாமில் இருந்து மட்டும் 10,872 பேர் அமர்நாத் யாத்திரை மேற் கொண்டுள்ளனர்.