Published : 25 Nov 2014 01:23 PM
Last Updated : 26 Nov 2014 09:55 AM
கருப்பு பணத்தை மீட்கும் விவகாரம் பற்றி எதிர்க்கட்சிகளுடன் விவாதம் நடத்த தயாராக இருப்பதாக பாஜக அறிவித்துள்ளது.
நாடாளுமன்ற பாஜக உறுப் பினர்கள் கூட்டம் நேற்று நடை பெற்றது. இக்கூட்டத்தில் மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, மத்திய அமைச்சர்கள் அருண் ஜேட்லி, வெங்கய்ய நாயுடு, நிதின் கட்கரி, ராஜீவ் பிரதாப் ரூடி உள்பட அக் கட்சியின் எம்.பி.க்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி பேசும்போது, “சரக்கு மற்று சேவை வரி மசோதாவை இந்த கூட்டத்தொடரில் தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளோம். இந்த மசோதா அடுத்த நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் நிறைவேற்றப்படும்.
இந்த மசோதாவுக்கு சில மாநில அரசுகள் ஆட்சேபம் தெரிவித் துள்ளன. அவர்களின் சந்தேகங்களை தீர்க்க முயற்சித்து வருகிறோம்” என்றார்.
நாடாளுமன்ற விவகாரத்துறை இணை அமைச்சர் ராஜீவ் பிரதாப் ரூடி பேசும்போது, “வெளிநாடுகளில் பதுக்கிவைக்கப்பட்டுள்ள கருப்பு பணத்தை மீட்பதில் பாஜக உறுதி யாக உள்ளது. கருப்பு பணம் மீட்பு தொடர்பாக மத்திய அரசு எடுத் துள்ள நடவடிக்கைகள் குறித்து எதிர்க்கட்சிகளுக்கு விளக்கிக் கூற தயாராக உள்ளோம்.
சரக்கு மற்றும் சேவை வரி மசோதா தொடர்பாக அனைத்து மாநில அரசுகளுடனும் பேச்சு நடத்தி, ஒருமித்த கருத்தை ஏற்படுத்த முயன்று வருகிறோம். 2016-ம் ஆண்டில், இந்த சட்டத்தை அமல் படுத்த முடிவு செய்துள்ளோம். இந்த சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிய பிறகு, அதற்கு துணை செய்யும் வகையில் மேலும் 3 சட்டங்களை அடுத்த ஆண்டு நிறை வேற்றவுள்ளோம்” என்றார்.
மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு பேசும்போது, “இக்கூட்டத் தொடரை ஆக்கப்பூர்வமாகவும், பலனளிக்கும் வகையிலும் நடத்து வதற்கு பாஜக எம்.பி.க்கள் ஒத்துழைப் புத் தர வேண்டும்” என்றார்.
இக்கூட்டம் முடிவடைந்த பின்பு, செய்தியாளர்களிடம் ராஜீவ் பிரதாப் ரூடி கூறியதாவது: வெளிநாடுகளில் பதுக்கிவைக்கப்பட்டுள்ள கருப்பு பணத்தை மீட்பதில் உறுதியாக உள்ளோம். இந்த விவகாரம் பற்றி விவாதம் நடத்த மத்திய அரசு தயாராக உள்ளது. கருப்பு பணத்தை மீட்பதற்காக அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் தொடர்பான தகவல்களை எதிர்க்கட்சிகளிடம் தெரிவிப்போம். இவ்வாறு அவர் கூறினார்.