

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் 5 லட்சம் பேர் ஒரே இடத்தில் கூடி யோகாசனம் செய்து புதிய சாதனை படைக்கவுள்ளனர் என யோகா குரு பாபா ராம்தேவ் தெரிவித்துள்ளார்.
ஆண்டுதோறும் ஜூன் 21-ம் தேதி சர்வதேச யோகா தினமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பாபா ராம்தேவ் பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளார். இது குறித்து அகமதாபாத்தில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, ‘‘அகமதாபாத்தில் உள்ள ஜிஎம்டிசி மைதானத்தில் வரும் ஜூன் 21-ம் தேதி இந்நிகழ்ச்சி நடக்கிறது. இதில் 5 லட்சம் பேர் பங்கேற்று என்னுடன் இணைந்து யோகாசனம் செய்யவுள்ளனர். இதுதான் உலகத்திலேயே மிகப் பெரிய யோகா நிகழ்ச்சியாக இருக்கும். இந்நிகழ்ச்சி புதிய உலக சாதனையையும் படைக்கும்’’ என்றார்.
வரும் ஜூன் 18-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை 4 நாட்கள் நடக்கவுள்ள இந்நிகழ்ச்சியை குஜராத் முதல்வர் விஜய் ரூபானி தொடங்கி வைக்கிறார். இந்நிகழ்ச்சியில் பங்கேற்க பிரத மருக்கும் அழைப்பு விடுக்கப்பட் டுள்ளது. ஆனால் அவர் அன்றைய தினம் லக்னோவில் நடக்கும் யோகா நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.