

மத்திய குடிநீர் துறை செயலாளர் பரமேஸ்வரன் அய்யர், மத்திய சுற்றுச் சூழல் துறை செயலாளர் அஜய் நாராயண் ஆகியோர் டெல்லியில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:
திருப்பதி ஏழுமலையான் கோயில், மதுரை மீனாட்சி அம்மன் கோயில், காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில், தாஜ்மஹால், வாரணாசியின் மணிகார்னிக படித்துறை, ஜம்மு வைஷ்ணவி தேவி கோயில், மும்பை சத்ரபதி சிவாஜி டெர்மினல், ராஜஸ்தானின் ஆஜ்மீர் ஷெரீப், அமிர்தசரஸ் பொற் கோயில், புரி ஜெகநாதர் கோயில் ஆகிய 10 இடங்களில் சர்வதேச தரத்தில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்படும்.
இதற்காக உலக வங்கியின் நிபுணர்களிடம் தொழில்நுட்ப உதவி கோரப்பட்டுள்ளது. இத்திட்டம் தொடர்பாக அடுத்த மாதம் கருத்தரங்கம் நடைபெறும்.
இவை தவிர 10 உயிரியல் பூங்காக் களிலும் சர்வதேச தரத்தில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. அதன்படி தமிழகத்தின் முதுமலை தேதிய பூங்கா, கேரளாவின் பெரியாறு, ஆந்திராவின் கோரிங்கா சரணாலயம், உத்தராகண்டின் ஜிம் கார்பெட் புலிகள் சரணாலயம், கர்நாடகாவின் நாகர்ஹொளே தேசிய பூங்கா உட்பட 10 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.