Last Updated : 12 May, 2017 06:59 PM

 

Published : 12 May 2017 06:59 PM
Last Updated : 12 May 2017 06:59 PM

ரூ.1000 கோடி நிலமோசடி ஊழல்; லாலுவின் அரசியல் கொள்ளை அரசியல்: பாஜக கடும் தாக்கு

லாலுவின் எம்.பி. மகள் மிசா பாரதி, மற்றும் அவரது 2 மகன்களுக்கு ரூ.1000 கோடி நில மோசடி விவகாரத்தில் தொடர்பு உண்டு என்று பாஜக இன்று கடும் குற்றம்சாட்டியுள்ளது.

இது குறித்து மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறும்போது, இது லாலு பிரசாத் யாதவ் ரயில்வே அமைச்சராக இருந்த போது நடைபெற்ற ஊழல், நிதிஷ் குமார் லாலுவின் மகன்களை பதவி நீக்கம் செய்வாரா என்று கேள்வி எழுப்பியுள்ளார். லாலுவின் மகன்கள் தேஜஸ்வி யாதவ், தேஜ் பிரதாப் யாதவ் ஆகியோர் நிதிஷ் அமைச்சரவையில் பதவி வகித்து வருகின்றனர்.

பிஹாரில் சந்தேகத்திற்குரிய வகையில் நிறைய நிலபேரங்கள் நடந்துள்ளன என்று கூறும் ரவிசங்கர் பிரசாத், மிசா பாரதியின் சொத்து விவரங்களை ஏன் இன்னும் தாக்கல் செய்யவில்லை? தேர்தல் ஆணையம் அதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

“லாலு பிரசாத்தின் அரசியல் கொள்ளை அரசியல் கோடிக்கணக்கான ரூபாய்கள் மதிப்புள்ள நிலங்கள் குறைந்த விலைக்கு கையகப்படுத்தப்பட்டுள்ளன. இது வதேரா மாதிரி வளர்ச்சி.

இத்தகைய நில மோசடி ஒன்று டெல்லியில் உள்ள பிஜ்வாசனில் நடந்துள்ளது. இதில் லாலு குடும்பத்தினர் பங்கு பெற்றுள்ளனர். மத்திய அரசு நிச்சயம் நடவடிக்கை எடுக்கும்.

இந்த நிலங்களைக் கையகப்படுத்துவதற்காக லாலு குடும்பத்தினர் நடத்துவதாகக் கூறும் நிறுவனங்களில் ஒருவரும் வேலைசெய்யவில்லை. எந்த ஒரு வர்த்தகமும் இல்லை.

பிஹார் தலைநகர் பாட்னாவில் 7.5 லட்சம் சதுர கிமீ பரப்பளவில் வரும் மிகப்பெரிய ஷாப்பிங் மால் இத்தகைய மோசடி நடமுறைகளால் உருவாவதே.

இந்த மகா ஊழல்களை மறைக்கவே மதச்சார்பின்மை என்ற போர்வை” இவ்வாறு சாடினார் ரவிசங்கர் பிரசாத்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x