நாடாளுமன்றம் இன்று கூடுகிறது

நாடாளுமன்றம் இன்று கூடுகிறது
Updated on
1 min read

ஊழல் குற்றச்சாட்டுகள், விலைவாசி உயர்வு, தெலங்கானா போராட்டம் உள்ளிட்ட பல்வேறு நெருக்கடிமிக்க சூழ்நிலையில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் வியாழக்கிழமை தொடங்குகிறது.

குறுகிய காலமே கூட்டத்தொடர் நடக்கும் என்பதால் கிடைக்கும் நேரத்தை முழுமையாக பயன்படுத்திக் கொள்ளும்படி எல்லா கட்சிகளை யும் கேட்டுக்கொண்டுள்ளார் பிரதமர் மன்மோகன் சிங்.

பெட்ரோலிய பொருள் விலை உயர்வு, உப்பிலிருந்து வெங்காயம் வரையிலான அத்தியாவசியப் பொருள்களின் விலை, எட்டாத உயரத்துக்கு சென்றுள்ளது போன்ற பலதரப்பட்ட பிரச்சினைகளை எழுப்பி ஆளும் கூட்டணி அரசுக்கு நெருக்கடி கொடுப்பது என மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், பார்வர்டு பிளாக், ஆர்எஸ்பி ஆகிய இடதுசாரி கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

2ஜி ஊழல் புகார் தொடர்பான விசாரணைக்கு பிரதமர் மன்மோகன் சிங், நிதி அமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோரை விசாரணைக்கு அழைக்காததன் மூலம் விசாரணையின் பிரதான அம்சத்தையே ஜேபிசி தலைவர் பி.சி.சாக்கோ கை கழுவிவிட்டார் என இடதுசாரிகள் சாடுகின்றனர்.

காமன்வெல்த் விளையாட்டு ஊழல், நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல் போன்ற பிரச்சினைகளை பிற எதிர்க்கட்சிகள் எழுப்பும்போது அதில் தங்களை யும் இணைத்துக் கொள்ள இடதுசாரிகள் முடிவு செய்துள்ளன என தெரிகிறது. இடதுசாரி தீவி ரவாதம், மேற்கு வங்க சட்டம் ஒழுங்கு நிலைமை, பற்றியும் கூட்டத்தொடரில் எழுப்ப அவை திட்ட மிட்டுள்ளன.

டிசம்பர் 5 ம் தேதி தொடங்கும் கூட்டத்தொடர் டிசம்பர் 20 வரை நடைபெறும். இந்த கூட்டத் தொடரை சுமுகமாக நடத்த ஒத்துழைப்பு தருவதாக எதிர்க்கட்சிகள் ஒப்புக் கொண்டுள்ளதாக நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்த கூட்டத்தொடரின் காலம் குறுகியதாக இருப்பதால் அதை நீட்டிக்க வேண்டும் என்று எல்லா கட்சிகளுமே கோரிக்கை விடுத்துள்ளன.

தெலங்கானா மற்றும் லோக்பால் மசோதாவை இந்த கூட்டத்தொடரில் நிறைவேற்ற

வேண்டும் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் வலியுறுத்தியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in