

கர்நாடகா மாநிலம் பெல்காம் மாவட்டத்தில், சரக்கு வாகனம் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. சரக்கு வாகனத்தில் பயணித்தவர்களில் 22 பேர் பலியாகினர்.
இன்று காலை 5.30 மணியளவில், கர்நாடகா - மகாராஷ்டிரம் எல்லையில் பெல்காம் மாவட்டத்தில் ஹல்கி எனும் இடத்தில் விபத்து நடந்துள்ளது.
யாத்கிர் மாவட்டத்தில் இருந்து கட்டுமானத் தொழிலாளர்கள் 30க்கும் மேற்பட்டோர் நேற்றிரவு, ஒரு டிரக்கில் ஏறி மகாராஷ்டிரம் சென்று கொண்டிருந்தனர். ஹல்கி அருகே டிரக் வந்து கொண்டிருந்த ஓட்டுநர் கட்டுப்பாட்டில் இருந்து விலகி சாலையில் இருந்த தடுப்பின் மீது மோதி வாகனம் தலை கீழாக கவிழ்ந்து விபத்து நடந்துள்ளது.
இதில் சம்பவ இடத்திலேயே 22 பேர் உடல் நசுங்கி பலியாகினர். 10 பேர் படுகாயமடைந்தனர்.
விபத்தில் பலியானவர்கள் குடும்பத்துக்கு ரூ.1 லட்சம் நிவாரணம் அளிக்கப்படும் என முதல்வர் சித்தாராமையா அறிவித்துள்ளார்.