ஒருங்கிணைந்த ஆந்திராவை இரண்டாக பிரித்தவர் சந்திரபாபு நாயுடு: ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ. ரோஜா குற்றச்சாட்டு

ஒருங்கிணைந்த ஆந்திராவை இரண்டாக பிரித்தவர் சந்திரபாபு நாயுடு: ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ. ரோஜா குற்றச்சாட்டு
Updated on
1 min read

ஒருங்கிணைந்த ஆந்திராவை இரண்டாக பிரித்தவர் சந்திரபாபு நாயுடு என நடிகையும் எம்.எல்.ஏ.வுமான ரோஜா குற்றம் சாட்டியுள்ளார்.

மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து பெறும் விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டுமென எதிர்க் கட்சியான ஒய்.எஸ்.ஆர். காங் கிரஸ் கட்சியினர் ஆந்திர சட்டப் பேரவையில் நேற்று வலியுறுத்தி னர். இது குறித்து பலமுறை விவாதம் நடைபெற்றிருப்பதால், இது தேவையற்றது என ஆளும் கட்சி சார்பில் கூறப்பட்டது.

ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸின் கோரிக்கையை சபாநாயகர் கோடல சிவப்பிரசாத் நிராகரித்து விட்டார். இதனால் அவையில் பெரும் அமளி ஏற்பட்டது. அவை 10 நிமிடங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக அவைக்கு வெளியே ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் நகரி சட்டப்பேரவை தொகுதி உறுப்பினரான நடிகை ரோஜா செய்தியாளர்களிடம் கூறியதாவது: சிறப்பு அந்தஸ்து குறித்து பேச ஆளும் கட்சி ஏன் பயப்படுகிறது? இதுகுறித்து விவாதிக்க முடியாது என கூறுவது அவமானம். மாநிலத்தை பிரிக்கக் கூடாது என 5 கோடி மக்கள் ஒருபுறம் போராடும்போது, சந்திரபாபு நாயுடு தனக்கு இரு மாநிலமும் இரு கண்கள் எனக்கூறி, மாநிலத்தைப் பிரிக்க ஒப்புதல் கடிதத்தை மத்திய அரசுக்கு வழங்கினார். மாநிலத்தைக் இரண்டாக்க அவர் ஒத்துழைப்பு கொடுத்தார்.

தேர்தலுக்கு முன் ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவோம் என பாஜகவும் 15 ஆண்டுகளுக்கு சிறப்பு அந்தஸ்து பெற்றுத் தருவேன் என சந்திரபாபு நாயுடுவும் முழங்கினர். ஆனால் தற்போது இது குறித்துப் பேச முடியாது என முதல்வர் கூறுகிறார்.

தேர்தல் நேரத்தில் சந்திரபாபு நாயுடு சிந்திக்காமல் பேசினாரா? சிறப்பு அந்தஸ்து குறித்து அனைவரும் போராட லாமென்றால் பின்வாங்குவது ஏன்? தெலங்கானா எம்.எல்.சி. தேர்த லில் வாக்களிக்க எம்.எல்.ஏ.வை ரூ.5 கோடி கொடுத்து வாங்க நினைத்த விவகாரத்தில் சந்திரபாபு நாயுடு பிடிபட்டார். இந்த விவகாரத்தால்தான் மத்திய அரசிடம் இவர் சரணடைந்து மாநில மக்களுக்கு துரோகம் இழைத்து வருகிறார். இவ்வாறு ரோஜா தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in