

சிபிஐ இயக்குனர் ரஞ்சித் சின்ஹாவின் நடத்தை பற்றிய குற்றச்சாட்டு தவறென்றால் விசாரணைக்குத் தயாராக இருக்கிறோம் என்று வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் மற்றும் பொதுநல வழக்கு மையம் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
சாந்தி பூஷன் புகார் எழுப்பிய சிபிஐ இயக்குநர் ரஞ்சித் சின்ஹாவின் வீட்டுக்கு வரும் வருகையாளர் பட்டியல் சாந்தி பூஷன் கையில் கிடைத்ததையடுத்து சிபிஐ இயக்குநர், 2ஜி வழக்கு மற்றும் நிலக்கரி ஊழல் வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டோரை சந்தித்துப் பேசியுள்ளார் என்ற குற்றச்சாட்டுகள் எழுந்தது.
இதனையடுத்து சிபிஐ இயக்குநர் மீது விசாரணை தேவை என்றும் இவர்கள் மனு செய்துள்ளனர்.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எச்.எல். தத்து தலைமையிலான அமர்விடம் இவர்கள் தெரிவிக்கும் போது, 2ஜி மற்றும் நிலக்கரி சுரங்க முறைகேட்டில் குற்றம்சாட்டப்பட்டோரை சந்தித்ததாக கூறப்படும் குற்றச்சாட்டு மற்றும் விசாரணைக்கு இடையூறு ஏற்படுத்திய புகார் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று இவர்கள் தரப்பில் வாதிடப்பட்டுள்ளது.
சிபிஐ இயக்குநர் சின்ஹா சார்பாக வாதாடிய வழக்கறிஞர் விகாஸ் சிங் தான் அளித்த மனுவில், ஆவணங்களை அளித்த அந்த நபரின் பெயரை பிரசாந்த் பூஷன் தெரிவிக்க வேண்டும் என்று கூறியதற்கு,
“நாங்கள் விசாரணையைச் சந்திக்கத் தயாராக இருக்கிறோம், நான் அவர்களை பார்க்காமலயேதான் இதனைக் கூறுகின்றேன். அவர்கள் விளைவுகளைச் சந்திக்க வேண்டும். அவருக்கு வேறொருவர் இந்தத் தகவலை அளித்தார் என்ற அடிப்படையில் டிஃபன்ஸுக்கான உரிமையை கைவிட்டுள்ளனர்.” என்று பூஷன் மற்றும் என்.ஜி.ஓ. செயலர் காமினி ஜைஸ்வால் சார்பாக வாதாடிய வழக்கறிஞர் துஷ்யந்த் தவே தெரிவித்தார்.
மேலும், அவர் கூறுகையில், சிபிஐ இயக்குநர் மீது வெளியாகியுள்ள இந்தப் புகாரை விசாரிக்க வேண்டும் என்றும், யார் இந்தத் தகவலை அளித்தார், அவர் பெயரை வெளியிட வேண்டும் என்று நீதிமன்றம் வலியுறுத்துதல் கூடாது என்றார்.
ஆனால் விகாஸ் சிங், பெயரை வெளியிடுவது நீதிமன்ற நடைமுறைகளுக்கான அவசியமாகும். சிபிஐ இயக்குநர் மீது தவறான குற்றச்சாட்டுகளைக் கூறி சிபிஐ என்ற அமைப்பையே நிலைகுலையச் செய்ய பூஷன் முயற்சி செய்கிறார் என்றார்.
இதற்கு பதில் அளித்த பூஷன் தரப்பு வழக்கறிஞர் தவே, “தகவல் அளிப்பவர் பெயரை ரகசியமாக வைத்திருப்பது புனிதமானது. அதனை உடைத்தால் ஒருவரும் தகவல் அளிக்க முன் வரமாட்டார்கள் என்றார்.
வாதம் முடிவுறவில்லை. நாளையும் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.