

தமிழக அரசியல் குழப்பம் விரை வில் தீரும் என்று மார்க்சிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி நம்பிக்கை தெரிவித்தார்.
இதுதொடர்பாக உ.பி. தலைநகர் லக்னோவில் நேற்று அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
சொத்துக்குவிப்பு மேல்முறை யீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இது ஊழலை ஒழிப்பதற்கான முன்னோ டியான தீர்ப்பாக அமைந்துள்ளது. எவ்வளவு உயர்ந்த இடத்தில் இருந்தாலும் ஊழல் செய்தால் தப்பிக்க முடியாது என்பதை இந்த தீர்ப்பு உணர்த்துகிறது.
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு காரணமாக தமிழகத்தில் தற்போது நிலவும் அரசியல் குழப்பம் விரை வில் தீரும் என்று நம்புகிறேன். சட்டப்பேரவையில் பெரும்பான் மையை நிரூபிக்கக்கூடியவர் களுக்கு ஆட்சியமைப்பதற்கு ஆளுநர் அழைப்பு விடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.