

ஆந்திர மாநிலம் துனியில் காப்பு சமூகத்தினரை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கக் கோரி கடந்த ஜனவரி 31-ல் நடந்த பொதுக்கூட்டத்தில் திடீரென வன்முறை வெடித்தது. அப்போது விசாகப்பட்டினத்தில் இருந்து விஜயவாடா நோக்கி சென்று கொண்டிருந்த ரத்னாச்சல் விரைவு ரயிலை துனி ரயில்நிலையம் அருகே வழி மறித்து வன்முறை யாளர்கள் தீ வைத்தனர்.
இதில் ரயில் பெட்டிகள் முற்றிலும் எரிந்து நாசமாகின. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய போலீஸார் 200 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
அண்மையில் வழக்கு விசாரணை சிஐடி போலீஸார் வசம் மாற்றப்பட்டதும் கடந்த வாரம் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரும், திருமலை, திருப்பதி தேவஸ்தான முன்னாள் அறங்காவலருமான பி.கருணாகர் ரெட்டியிடம் விசாரணை நடத்தப்பட்டது.
இந்நிலையில் போராட்டத்தின் போது தனியார் ‘டிவி’ சேனல் நிர்வாக இயக்குநர் சாய்சுதாகரும் பங்கேற்று வன்முறையை தூண் டும் வகையில் பேசியதாக கூறப் படுகிறது. மேலும், போராட்டக் காட்சி களை தனது ‘டிவி’ சேனலில் அவர் தொடர்ந்து ஒளிபரப்பியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதை யடுத்து சாய்சுதாகரை குண்டூரில் உள்ள அலுவலகத்துக்கு அழைத்து நேற்று சிஐடி போலீஸார் நீண்ட நேரம் விசாரணை நடத்தினர்.