

சீக்கியர்களால் கொண்டாடப்படும் குருநானக் ஜெயந்தி விழாவையொட்டி நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
குரு நானக் பிறந்த தினமான (இன்று) நவம்பர் 6-ஆம் தேதி குரு நானக் ஜெயந்தி விழாவாக உலகம் முழுவதிலும் உள்ள சீக்கியர்களால் கொண்டாடப்படுகிறது.
பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், "குரு நானக் தேவரை நான் பெரும் மதிப்பிற்குரியவராக வணங்குகிறேன். நாட்டு மக்கள் அனைவரும் அவரது பிறந்த தினத்தில் அவரது வழியில் உண்மை, அமைதி, இரக்க குணம் ஆகியவை பெற்று மிகிழ்ச்சியுடன் வாழ வேண்டும்" என்று கூறியுள்ளார்.