

வீட்டுப் பணிப்பெண் கொலை வழக்கில் கைதாகி போலீஸ் காவலில் இருக்கும் பகுஜன் எம்.பி. தனஞ்சய் சிங் மீது பெண் ஒருவர் பாலியல் பலாத்கார புகார் கொடுத்துள்ளார்.
டெல்லியில் வீட்டு பணிப் பெண் மர்மமான முறையில் இறந்தது தொடர்பாக உத்தர பிரதேச மாநிலம், ஜவுன்பூர் மக்களவை உறுப்பினர் தனஞ்சய் சிங், அவரது மனைவி ஜாக்ருதி சிங் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். ஜாக்ருதி மீது கொலை வழக்குப் பதிந்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில், 42 வயது பெண் ஒருவர் எம்.பி. தனஞ்சய் சிங், தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டியுள்ளார்.