

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து தொடர வேண்டியதன் முக்கியத்துவம் குறித்து பிரதமரிடம் நான் விளக்கமளித்தேன். அதன் பிறகுதான் இந்த விஷயத்தில் பாஜக அமைதியானது என்று பிரபல வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி கூறியுள்ளார்.
இது தொடர்பாக ஸ்ரீநகரில் நேற்று செய்தியாளர்களிடம் ராம் ஜேத்மலானி கூறியது: காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டு வருவதை யாராலும் தடுக்க முடியாது. பாஜக கூட இப்போது இந்த விஷயத்தில் அமைதியாகிவிட்டது. இது தொடர்பாக பிரதமர் மோடியிடம் நான் விளக்கமளித்ததே பாஜக இந்த விஷயத்தை கைவிடக் காரணம். அரசியல் சாசன சடத்தின் 370-வது பிரிவை சிலர் சரியாக புரிந்து கொள்ளவில்லை. இதனால்தான் அதற்கு எதிராக சிலர் பேசி வருகின்றனர் என்று அவர் கூறினார்.