

சீனப் பயணத்தை நிறைவு செய்து வியாழக்கிழமை இரவு பெய்ஜிங்கில் இருந்து டெல்லி திரும்பிய பிரதமர் மன்மோகன் சிங், விமானத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தபோது கூறியனவற்றில், இரண்டு விஷயங்கள் முக்கியத்துவம் பெறுபவை.
நிலக்கரிச் சுரங்க முறைகேடு வழக்கு குறித்த கேள்விக்கு பதிலளித்தவர், "நான் சட்டத்துக்கு அப்பாற்பட்டவன் அல்ல. நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு தொடர்பாக சிபிஐ அமைப்போ அல்லது வேறு எந்த அமைப்போ என்னிடம் கேள்வி எழுப்பலாம். இந்த விவகாரத்தில் மறைப்பதற்கு என்னிடம் எதுவும் இல்லை" என்றார்.
அப்போது, ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் ஊழல் விவகாரங்களால் பிரதமரின் நன்மதிப்புக்கு இழுக்கு ஏற்பட்டுள்ளதா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்குப் பதிலளித்த மன்மோகன் சிங், "காலம்தான் இதனை கணிக்க முடியும். நான், எனது பணியைச் செய்கிறேன். அதனை தொடர்ந்து செய்து கொண்டிருப்பேன். என்னுடைய 10 ஆண்டு பதவிக்காலம், என்ன தாக்கத்தைக் கொண்டிருக்கும் என்பது குறித்து வருங்கால வரலாற்று ஆய்வாளர்கள் தீர்ப்பு எழுதுவார்கள்" என்றார்.
சரி, உங்கள் பார்வையில், பிரதமர் மன்மோகன் சிங்கின் பதவிக்காலம் கொண்டிருக்கும் தாக்கம் என்ன?
விவாதிக்கலாம் வாங்க.