

தெலங்கானா மாநில துணை முதல்வர் கடையம் ஸ்ரீஹரி, நேற்று முன்தினம் மாலை மகபூபா பாத் மாவட்டம் தொர்ரூரு பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளிக்குச் சென்றார். அங்கு ரூ.74 லட்சம் செலவில் கட்டப்பட்ட கூடுதல் வகுப்பறைகளைத் திறந்து வைத்து அவர் பேசியதாவது:
மாணவர்களின் கல்வியில் அலட்சியம் கூடாது. பள்ளி அறை களில் ஆசிரியர்கள் யாராவது பாடம் நடத்தாமல் செல்போனில் பேசுவதை தகுந்த ஆதாரத்துடன் நிரூபணம் செய்தால், சம்பந்தப் பட்ட ஆசிரியர் வீட்டிற்கு அனுப் பப்படுவார். பாஜ, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஆளும் மாநிலங்களில்கூட இல்லாத வாறு தெலங்கானாவில் ஒரே சமயத்தில் 510 குருகுல பள்ளி கள் திறக்கப்பட்டது. இதற்காக ரூ. 12,000 கோடி செலவிடப் பட்டுள்ளது. கடந்த 3 ஆண்டு களில் தெலங்கானாவில் 26,000 அரசு காலி பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் பேசினார்.