உ.பி. காங். தலைவர் ராஜ் பப்பர் ராஜினாமா செய்ய முடிவு

உ.பி. காங். தலைவர் ராஜ் பப்பர் ராஜினாமா செய்ய முடிவு
Updated on
1 min read

உ.பி. தேர்தல் தோல்விக்கு தார்மீகப் பொறுப்பேற்று அம்மாநில காங்கிரஸ் தலைவர் ராஜ் பப்பர் தனது பதவியை ராஜினாமா செய்ய முன்வந் துள்ளார்.

இதுகுறித்து அவர் டெல்லியில் நேற்று செய்தியாளர்களிடம் கூறும்போது, “உ.பி.யில் காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கு நான் தார்மீகப் பொறுப்பேற்கிறேன். என்னிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. என்னால் அதை நிறைவேற்ற முடியவில்லை. எனவே என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்வேன்” என்றார்.

தோல்விக்கு ராகுல் காந்தி அல்லது குலாம் நபி ஆசாத் போன்றோர் ஏன் பொறுப்பேற்கவில்லை என்ற கேள்விக்கு, “5 மாநில தேர்தல்களிலும் கட்சியின் தேசிய தலைவர்கள் கடுமையாக உழைத்தனர். ஓரிரு மாநிலங்களில் ஏற்பட்ட தோல்விக்காக கட்சித் தலைமையை பொறுப்பாக்க முடியாது” என்றார்.

உ.பி.யில் சமாஜ்வாதி கட்சி யுடன் கூட்டணி அமைத்து 105 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டி யிட்டது. ஆனால் வெறும் 7 தொகுதி களில் மட்டுமே வென்றது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in