உ.பி.யில் படகு கவிழ்ந்து 3 சிறுவர்கள் பலி, 8 பேர் மாயம்

உ.பி.யில் படகு கவிழ்ந்து 3 சிறுவர்கள் பலி, 8 பேர் மாயம்
Updated on
1 min read

உத்தரப்பிரதேச மாநிலம் ரேபரேலியில் கங்கை நதியில் படகு கவிழ்ந்து 3 சிறுவர்கள் உயிரிழந்தனர். மற்ற 8 பேர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

கஞ்சாஸ் என்ற கிராமத்தைச் சேர்ந்த 18 பேர் இந்த படகில் சென்றனர். ரால்பூர் படித்துறை அருகே படகு சென்ற போது அது கவிழ்ந்தது. அப்போது படகில் சென்ற 6 பேர் நீந்தி கரை சேர்ந்தனர் என மாவட்ட காவல்துறை கண்காணிப் பாளர் என்.கொளஞ்சி தெரி வித்தார்.

3 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. மற்ற 8 சிறுவர்கள் கதி தெரியவில்லை. தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்று அவர் மேலும் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in