பத்மநாப சுவாமி கோயில் ஆய்வு அறிக்கை: அரச குடும்பத்தினர் வேதனை

பத்மநாப சுவாமி கோயில் ஆய்வு அறிக்கை: அரச குடும்பத்தினர் வேதனை
Updated on
1 min read

திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோயில் நிர்வாகத்தில் குளறுபடி இருப்பதாகக் கூறி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதையடுத்து, அரச குடும்பத் தினரின் கட்டுப்பாட்டில் இருந்த இந்தக் கோயில் நிர்வாகம், உச்ச நீதிமன்றம் நியமித்த நிர்வாகக் குழுவின் கீழ் வந்தது. இதுகுறித்து ஆய்வு செய்ய முன்னாள் மத்திய கணக்கு தணிக்கையாளர் வினோத் ராய் தலைமையிலான குழு அறிக்கை தாக்கல் செய்தது.

இந்நிலையில், இதுகுறித்து அரச குடும்பத்தினர் வெளியிட் டுள்ள அறிக்கை:, “இக்கோயிலில் நிதி முறைகேடு நடந்திருப்பதாக வும் ரூ.186 கோடி மதிப்பிலான தங்க குடங்கள் காணாமல் போயிருப்பதாகவும் ஊடக தகவல்கள் கூறுகின்றன.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட கோயில் அதிகாரிகளிடமோ, எங்களிடோமோ விளக்கம் கேட்காமல் இந்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது எங்களுக்கு மிகுந்த மன வேதனை தருகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in