Published : 01 Aug 2016 09:00 am

Updated : 14 Jun 2017 16:52 pm

 

Published : 01 Aug 2016 09:00 AM
Last Updated : 14 Jun 2017 04:52 PM

பெண் தொண்டர் தற்கொலை விவகாரம்: ஆம் ஆத்மி எம்எல்ஏ சரத் சவுஹான் கைது

கட்சியின் பெண் தொண்டர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக, நரேலா தொகுதி ஆம் ஆத்மி எம்எல்ஏ சரத் சவுஹானை போலீஸார் நேற்று கைது செய்தனர்.

டெல்லியின் வடமேற்கு பகுதி யில் உள்ள நரேலா சட்டப்பேரவை தொகுதியின் ஆம் ஆத்மி எம்எல்ஏ வான சரத் சவஹானுக்கு நெருக்க மான பரத்வாஜ் என்பவர், கட்சியின் பெண் தொண்டர் ஒருவரிடம் தகாத முறையில் நடந்து கொள்ள முயற்சித்துள்ளார். இது குறித்து அந்த பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில், பரத்வாஜ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கடந்த ஜூன் மாதம் கைது செய்யப்பட்டார். எனினும் உடனடியாக அவர் ஜாமீனில் விடுதலையானார்.

இதனால் மனம் உடைந்த அந்த பெண் தொண்டர் கடந்த மாதம் திடீரென நரேலாவில் உள்ள தனது வீட்டில் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றார். உடனடியாக அவரது குடும்பத்தினர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அப்போது போலீஸாரிடம் கொடுத்த வாக்கு மூலத்தில் தன்னிடம் தவறாக நடக்க முயன்ற பரத்வாஜு’க்கு உள்ளூர் எம்எல்ஏ சரத் சவுஹான் அடைக்கலம் கொடுத்து ஆதரவாக இருந்து வருகிறார் என அடுக்கடுக் கான புகார்களை தெரிவித்தார்.

எனினும் சிகிச்சை பலனின்றி கடந்த 19-ம் தேதி உயிரிழந்தார். இதையடுத்து தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பதிவு செய்த டெல்லி போலீஸார், விசா ரணையை சிறப்பு புலனாய்வு குழுவிடம் ஒப்படைத்தனர்.

அதன் அடிப்படையில் விசா ரணை மேற்கொண்ட சிறப்பு புலனாய்வு குழுவினர் கடந்த 26-ம் தேதி சோனிபட்டில் இருந்த பரத்வாஜை கைது செய்தனர். பெண் தொண்டருக்கு பாலியல் தொல்லை கொடுத்தது குறித்து அவரிடம் விசாரணை நடத்திய சிறப்பு புலனாய்வு குழுவினர், கடந்த சனிக்கிழமை இரவு ஆம் ஆத்மி எம்எல்ஏ சரத் சவுஹானை யும் கைது செய்தனர். மேலும் உடந் தையாக இருந்த உதவியாளர்கள் 7 பேரையும் கைது செய்துள்ளனர்.

பெண் தொண்டர் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் எம்எல்ஏ சரத் சவுஹானின் தொடர்பு குறித்து பின்னர் விரிவாக அறிவிக் கப்படும் என சிறப்பு புலனாய்வு குழுவினர் தெரிவித்துள்ளனர். இதையடுத்து பல்வேறு வழக்கு களில் கைதாகியுள்ள ஆம் ஆத்மி எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

பெண் தொண்டர் தற்கொலைஆம் ஆத்மி எம்எல்ஏசரத் சவுஹான் கைது

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author