கார்கில் போர் தியாகிகளுக்கு பிரதமர் மோடி புகழஞ்சலி

கார்கில் போர் தியாகிகளுக்கு பிரதமர் மோடி புகழஞ்சலி
Updated on
1 min read

கார்கில் போர் தியாகிகளுக்கு பிரதமர் மோடி புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.

கடந்த 1999-ம் ஆண்டு காஷ்மீர் எல்லை யில் உள்ள கார்கில் பகுதியை பாகிஸ் தான் ஆக்கிரமித்தது. இதையடுத்து பாகிஸ்தானுக்கு எதிராக மே ஜூலையில் கார்கில் போர் நடைபெற்றது. இதில் இந்தியா வெற்றி பெற்றது. இந்நிலையில் கார்கில் போரின் 17-வது வெற்றி தினம் நேற்று கொண்டாடப்பட்டது.

இதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட செய்தியில், “1999-ம் ஆண்டு கார்கில் போரில் வெற்றி பெறு வதற்காக இந்திய அரசியல் தலைமை காட்டிய உறுதியை நாம் பெருமிதத் துடன் நினைவு கூர்கிறோம். ஊடுருவல் காரர்களுக்கு தகுந்த மற்றும் மறக்க முடியாத பதிலடி கொடுத்த நமது வீரர் களின் துணிவை இந்தியா ஒருபோதும் மறக்காது. கார்கில் போர் வெற்றி நாளில், இந்தியாவுக்காக தனது இறுதி மூச்சு வரை போரிட்ட ஒவ்வொரு வீரருக்கு முன் தலைவணங்குகிறேன். அவர்களின் துணிவான தியாகம் நம்மை ஊக்குவிப்ப தாக உள்ளது” என்று கூறியுள்ளார்.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி விடுத்துள்ள செய்தியில், “கார்கில் போரில் உயிர்நீத்த ராணுவ வீரர்கள், அதிகாரிகளுக்கு அஞ்சலி செலுத் துகிறேன். இவர்களின் நாட்டுப்பற்று வரும் தலைமுறையினரை தொடர்ந்து ஊக்குவிக்கும். கார்கில் போர் வெற்றி தினத்தில் இந்திய ஆயுதப் படைகளுக்கு மனமார்ந்த நன்றி தெரிவிக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in