Published : 24 Dec 2013 12:00 AM
Last Updated : 24 Dec 2013 12:00 AM

அக்னி 3 ஏவுகணை பரிசோதனை வெற்றி

அணு ஆயுதத்தை ஏந்திச் சென்று 3,000 கி.மீ. தொலைவுக்கு அப்பா லுள்ள இலக்கைத் தாக்கும் திறன் கொண்ட அக்னி- 3 ஏவுகணை ராணுவத்தால் வெற்றிகரமாக ஏவிப் பரிசோதித்துப் பார்க்கப்பட்டது.

“ஒடிசா மாநிலம் வீலர் தீவுகளில் இருந்து அக்னி- 3 வெற்றிகரமாக ஏவப்பட்டது. ராணுவத்தின் உத்திப் பூர்வு படைத் தளப் பிரிவு மூலம் திங்கள்கிழமை மாலை 4.55 மணிக்கு ஏவப்பட்ட அக்னி -3, அனைத்துப் பரிசோதனை நிலைகளையும் வெற்றிகரமாகக் கடந்தது” என பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பிரிவு (டிஆர்டிஓ) செய்தித் தொடர் பாளர் ரவி குப்தா தெரிவித்தார்.

பயன்பாட்டுப் பரிசோதனை முறையில் அக்னி-3 ஏவப்படுவது இது இரண்டாவது முறையாகும். மேம்படுத்தப்பட்ட பரிசோதனை முயற்சியாக கடந்த 2009 ஆம் ஆண்டு ஜூலை 9-ம் தேதி ஏவப்பட்ட போது, அது திருப்திகரமான முடிவைத் தரவில்லை.

ஆனால், 2007, 2008, 2010 ஆம் ஆண்டுகளில் சோதனை முறையில் ஏவப்பட்ட போதும், 2012, செப்டம்பர் 21 ம் தேதி ராணுவத்தால் பயன்பாட்டுப் பரிசோதனை முயற்சியாக ஏவப்பட்ட போதும் அக்னி-3 வெற்றிகரமாக இலக்கைத் தாக்கியது. அக்னி-3 ஏவுகணையானது 17 மீட்டர் உயரம், 2 மீட்டர் சுற்றளவு, 50 டன் எடை கொண்டது. இது 1,500 கிலோ எடையுள்ள வெடிப் பொருளை ஏந்திச் சென்று தாக்க வல்லது. ஏற்கெனவே ராணுவத்தில் இணைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x