

மேற்கு வங்க மாநிலம் டார்ஜி லிங் பகுதியில், கடந்த 12-ம் தேதி முதல் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி(80) 4 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். அங்கிருந்து நேற்று டெல்லி திரும்ப திட்டமிட்டிருந்தார். ஆனால், கடும் மழை, பனிமூட்டம் காரணமாக விமானப் படை ஹெலிகாப்டரில் பிரணாப் பயணம் செய்வதை அதிகாரிகள் தடுத்துவிட்டனர்.
அதன்பின், டார்ஜிலிங்கில் அருகில் உள்ள பக்டாக்ராவுக்கு சென்று அங்கிருந்து விமானத்தில் டெல்லி செல்ல முடிவு செய்யப் பட்டது. இதையடுத்து பக்டாக்ரா வுக்கு பிரணாப் முகர்ஜி காரில் புறப்பட்டார். அவருடன் பாதுகாப்பு வாகனங்கள் சென்றன. பலத்த மழை, பனிமூட்டத்தால் எதிரில் சாலை சரியாக தெரிவில்லை.
மழையால் மலைப்பாதை மிகவும் அபாயகரமாக இருந்தது. டார்ஜிலிங்கில் இருந்து 30 கி.மீ. தொலைவில் உள்ள சொனாடா பகுதியில் ஒரு வளைவில் திரும் பும் போது, பிரணாப்புக்கு பாது காப்பாக சென்ற மகிந்திரா ஸ்கார் பியோ கார் திடீரென பள்ளத்தில் சரிந்து உருண்டது. 100 அடி பள்ளத்தில் கார் உருண்டு சென்று மரத்தில் மோதி சிக்கி கொண்டது.
அதை பார்த்து உடன் சென்ற பாதுகாப்பு வீரர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக பிரணாப்பை பாதுகாப்பான இடத்துக்கு அழைத்து சென்றனர். பிரணாப்புடன் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் உடன் சென்றார். தகவல் அறிந்து அவர் காரில் இருந்து இறங்கி மீட்புப் பணிகளை துரிதப்படுத்தினார். அத்துடன் பிரணாப்பின் மகனும் எம்.பி.யுமான அபிஜித் முகர்ஜி, 100 அடி பள்ளத்தில் இறங்கி பாதுகாப்பு வீரர்களை மீட்க முற்பட்டார். அவரை பாதுகாப்பு வீரர்கள் தடுத்து விட்டனர்.
உடனடியாக விபத்தில் சிக்கிய காரில் இருந்து 6 வீரர்களும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் புலனாய்வு கழக (ஐபி) அதிகாரி யும் ஒருவர். அவரை டெல்லி அழைத்து சென்று மருத்துவ மனையில் சேர்த்துள்ளனர். குடியரசுத் தலைவருக்குப் பாது காப்பாக செல்லும் வாகனங்கள், வழக்கமாக உள்பக்கம் கதவு களை (லாக்) பூட்டுவதில்லை. அதனால் கார் 100 அடி பள்ளத் தில் கார் உருண்ட போது கதவு கள் திறந்து பாதுகாப்பு வீரர் கள் தூக்கி வீசப்பட்டுள்ளனர். எனினும் அதிர்ஷ்டவசமாக உயிர்ச் சேதம் ஏதுமில்லை.
பிரணாப்புடன் சென்ற பாது காப்பு வாகனம் விபத்தில் சிக்கிய தகவல் பிரதமர் மோடிக்கு தெரி விக்கப்பட்டது. உடனடியாக பிரணாப்பை சந்தித்து மோடி நலம் விசாரித்தார்.