

காஷ்மீர் மக்களை நசுக்கவே மத்திய அரசு முயற்சித்து வருகிறது. அதைத் தான் ராணுவ தளபதி பிபின் ராவத்தும் தனது கருத்து மூலம் வெளிப்படுத்தி இருக்கிறார் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பிரகாஷ் காரத் கூறியுள்ளார்.
மேலும், இதுகுறித்து பிரகாஷ் காரத் கூறும்போது, '' இளைஞர் ஒருவரை ஜீப்பின் முன் பகுதியில் கட்டி வைத்து மனித கேடயமாக பயன்படுத்தியது தொடர்பாக ராணுவ தளபதி பிபின் ராவத் தெரிவித்த கருத்து காஷ்மீர் குறித்த மத்திய அரசின் பார்வையைதான் பிரதிபலிக்கிறது.
காஷ்மீர் மக்களை நசுக்கவே மத்திய அரசு முயற்சித்து வருகிறது. அதைத் தான் ராணுவ தளபதி பிபின் ராவத்தும் தனது கருத்து மூலம் வெளிப்படுத்தி இருக்கிறார். காஷ்மீர் பள்ளத்தாக்கில் பொதுமக்களுக்கு எதிராக ராணுவத்தை மத்திய அரசு கண்மூடிக்தனமாக பயன்படுத்தி வருகிறது. இதனால் ஏற்படும் பாதிப்பை நிச்சயம் சரி செய்ய முடியாது'' என்றார்.