Last Updated : 23 Nov, 2014 11:27 AM

 

Published : 23 Nov 2014 11:27 AM
Last Updated : 23 Nov 2014 11:27 AM

முல்லைப் பெரியாறு அணை விவகாரம்: பசுமை தீர்ப்பாயத்தை அணுக கேரளம் முடிவு?

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தை அணுகுவது குறித்து கேரள அரசு பரிசீலித்து வருகிறது. இதுதொடர்பாக மாநில வனத்துறை அமைச்சர் திருவஞ்சூர் ராதாகிருஷ்ணன் திருவனந்தபுரத்தில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

முல்லைப் பெரியாறு அணை யில் 142 அடி வரை தண்ணீரை தேக்கி வைப்பதற்காக, அணையிலிருந்து நீர் வெளியேறுவதை தமிழக அரசு குறைத்தது. இதனால், பெரியார் புலிகள் காப்பகத்தின் ஒரு பகுதியில் சுற்றுச்சூழல் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக இயற்கை அழகுடன் கூடிய அப்பகுதியும் தாவரங்கள் மற்றும் விலங்குகளும் தண்ணீரில் மூழ்கி உள்ளன.

இந்த அளவுக்கு தண்ணீரை தேக்கினால், அணையைச் சுற்றி 5.68 சதுர கி.மீ. பரப்பளவி லான வனப்பகுதியில் உள்ள உயிரினங் கள் அழிந்து சுற்றுச்சூழல் பாதிக்கப்படும். எனவே, இத்தகைய காரணங்களை அடிப்படையாகக் கொண்டு 142 அடி அளவுக்கு தண்ணீரை தேக்குவதற்கு தடை விதிக்குமாறு தேசிய பசுமை தீர்ப்பாயத்தை அணுகுவது குறித்து பரிசீலித்து வருகிறோம் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x