

500, 1000 ரூபாய் நோட்டுகள் அச்சிட அரசுக்கு ஏற்படும் செலவு குறித்து, மும்பையைச் சேர்ந்த தகவல் உரிமைச் சட்ட (ஆர்டிஐ) ஆர்வலர் அனில் கல்கலி கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு, ரிசர்வ் வங்கி உதவி பொது மேலாளர் பி.வில்சன் நேற்று அளித்துள்ள பதிலில், “2016-17-ம் நிதியாண்டில் ஆயிரம் தாள்கள் கொண்ட ரூ.500 நோட்டுக் கட்டின் விற்பனை விலை ரூ.3,090” என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து அனில் கல்கலி கூறும்போது, “ரூபாய் நோட்டு களை பாரதிய ரிசர்வ் பேங்க் நோட் முத்ரான் பிரைவேட் லிமிடெட் (பிஆர்பிஎன்எம்பிஎல்) என்ற நிறு வனம் அச்சிடுகிறது. இந்த நிறுவனத்திடம் இருந்தே ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி வாங்குகிறது.
500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்த நிலையில், புதிய ரூ.500 நோட்டுகள் இதுவரை எவ்வளவு அச்சிடப்பட்டுள்ளது போன்ற விவரங்களை அரசு தெரிவிக்காதது வியப்பாக உள்ளது” என அனில் கல்கலி தெரிவித்தார்.