

மத்தியப் பிரதேசத்தில் பெண் ஒருவர் தான் திருடிச் சென்ற ஆண் குழந்தையை 12 நாட்களுக்குப் பிறகு திரும்ப ஒப்படைத்துள்ளார்.
போபால் நகரில் உள்ள ஹமீதியா மருத்துவமனையில் பெண் ஒருவர் கடந்த சனிக் கிழமை ஓர் ஆண் குழந்தையு டன் வரிசையில் நின்றிருந்தார். அப்போது அருகில் இருந்த 14 வயது ஹுமா என்ற சிறுமியிடம் குழந்தையை பார்த்துக்கொள்ளு மாறும் சிறிது நேரத்தில் திரும்பி வருவதாகவும் கூறிச் சென்றார். ஆனால் நீண்ட நேரமாகியும் அப்பெண் திரும்பி வரவில்லை. இதையடுத்து அக்குழந்தையை யும் அதனுடன் தரப்பட்ட பையை யும் அருகில் உள்ள காவல் நிலை யத்தில் ஹுமா ஒப்படைத்தார்.
பையில் இருந்த உடைமை களை போலீஸார் ஆராய்ந்த போது, அதில் அப்பெண் எழுதி யிருந்த கடிதம் கிடைத்தது. அதில், “கடவுளே என்னை மன்னித்து விடு, இந்தக் குழந்தையை நான் எடுத்துவந்து விட்டேன். இதன் பெற்றோரிடமும் நான் மன்னிப்பு கேட்க விரும்புகிறேன்” என்று அப்பெண் எழுதியிருந்தார்.
ஹோஷாங்காபாத் மாவட்டம், பிப்பரியா என்ற இடத்தில் 12 நாட் களுக்கு முன் அக்குழந்தையை திருடியதாகவும் அக்குழந்தையின் தந்தை பெயரையும் அவர் கூறி யிருந்தார். மேலும், தனக்கு 3 பெண் குழந்தைகள் இருப்பதாகவும், ஆண் குழந்தை இல்லாததால் உறவினர்களின் நெருக்குதல் காரணமாக திருடும் முடிவுக்கு வந்ததாகவும் எழுதியுள்ளார்.
இதையடுத்து பிப்பரியா காவல் துறையினரை போபால் போலீஸார் தொடர்புகொண்டனர். இதில் கடந்த 6-ம் தேதி ஜஸ்வந்த் தாக்கூர் ராமாவதி தம்பதியின் குழந்தை திருடுபோனது தெரிய வந்தது. இதையடுத்து பெற்றோரிடம் குழந்தையை ஒப்படைத்தனர்.