Last Updated : 03 Nov, 2014 12:39 PM

 

Published : 03 Nov 2014 12:39 PM
Last Updated : 03 Nov 2014 12:39 PM

வாகா எல்லையில் பயங்கர தாக்குதல்: இந்தியா - பாக். வர்த்தகம் நிறுத்தம்

வாகா எல்லைத் தற்கொலைப்படை தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 61 ஆக அதிகரித்துள்ள நிலையில், சர்வதேச எல்லையில் வர்த்தகம் 3 நாட்களுக்கு நிறுத்தப்பட்டுள்ளது.

இந்திய - பாகிஸ்தான் எல்லையில் சர்வதேச எல்லைக்கு 500 மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள வாகாவில் ஞாயிறு மாலை கொடி இறக்கும் நிகழ்ச்சி நடந்த சிறிது நேரத்தில் சக்திவாய்ந்த குண்டுவெடித்தது. கொடி இறக்கும் நிகழ்ச்சியை கண்டுகளிக்க வந்த பலர் இதில் சிக்கினர்.

இந்த பயங்கர தாக்குதல் சம்பவத்தில் பலியானோர் எண்ணிக்கை 61 ஆக அதிகரித்துள்ளது, நூற்றுக்கணக்கானோர் படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே நாளை (செவ்வாய்கிழமை) மொகரம் திருநாள் இஸ்லாமியர்களால் கடைப்பிடிக்கப்பட உள்ள நிலையில் வாகா எல்லைப் பகுதியில் பதற்றமான சூழல் நீடிக்கிறது. இதனால் திங்கட்கிழமை இரு நாட்டு எல்லையிலும் வர்த்தக நடைபெறவில்லை என அட்டாரி சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், இயல்பு நிலை திரும்ப சில நாட்கள் தேவை என்பதால் அடுத்த 2 நாட்களுக்கு இரு நாட்டு எல்லையிலும் வர்த்தகம் நடைபெறாது என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். வர்த்தக நிறுத்தத்தால், பழங்கள், காய்கறிகள் கொண்ட நூற்றுக்கணக்கான ட்ரக்குகள் நிறுத்தப்பட்டுள்ளன.

பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்திய எல்லை பகுதியில் கடுமையான பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. வழக்கமாக நடைபெறும் எல்லையோர பாதுகாப்பு படை வீரர்களின் அணிவகுப்பும் பாகிஸ்தானின் வேண்டுகோளை அடுத்து நடத்தப்படவில்லை. அடுத்த இரண்டு நாட்களுக்கு இரு நாட்டு எல்லை வீரர்களின் அணிவகுப்பு நடைபெறாது என்று எல்லை பாதுகாப்புப் படை அறிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x