ஆங்கிலேயர் காலம் முதல் கேஜ்ரிவால் ஆட்சி வரை

ஆங்கிலேயர் காலம் முதல் கேஜ்ரிவால் ஆட்சி வரை
Updated on
2 min read

டெல்லியை முழு உரிமை கொண்ட ஆட்சிப் பகுதியாக மாற்ற கடந்த நூறாண்டுகளாக பலமுறை முயற்சிக் கப்பட்டதாக அதன் வரலாற்று பதிவுகள் கூறுகின்றன. இதன்படி டெல்லியை ஆட்சி செய்த காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா அரசுகளும் இதற்கான முயற்சியில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது.

ஆங்கிலேயர் ஆட்சியில் கடந்த 1911-ல் நம் நாட்டின் தலைநகர் கல்கத்தா வில் இருந்து டெல்லிக்கு மாற்றப் பட்டது. இதற்கு முன் டெல்லியை தனி மாகாணமாக மாற்றுவது குறித்து முதன் முறையாக ஆலோசிக்கப்பட்டு ஆகஸ்ட் 25, 1911-ல் ஓர் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதன்படி, ‘தேசிய அரசின் தலைநகரான டெல்லி தனியாக வும், சுதந்திரமாகவும் செயல்பட வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது. அடுத்து, இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை டாக்டர் அம்பேத்கர் இயற்றிய போது, டெல்லியை ‘சி’ பிரிவு மாநிலம் எனப் பிரித்தார். இதில் சட்டம் ஒழுங்கு, உள்ளாட்சி அமைப்புகள் போன்றவை டெல்லி நிர்வாகத்தில் இருந்து தனித்து இயங்கும் என்று கூறியிருந்தார். இதிலும் சில நடைமுறை சிக்கல்கள் வந்ததால் 1955-ல் அமைக்கப்பட்ட மாநில மறுசீரமைப்பு குழு தனது அறிக்கையில் முதல்வர் பதவி மற்றும் சட்டப்பேரவை அமைப்பை ரத்து செய்து அதன் நிர்வாகத்தை மாநகர மேயர் தலைமையிலான உள்ளாட்சி அமைப்பிடம் விட பரிந்துரைத்தது.

இது ஏற்கப்படாமல் 1956-ல் கூடிய மத்திய அமைச்சரவை மீண்டும் ஆலோ சனை செய்தது. இதில் டெல்லியை, யூனியன் பிரதேசமாக மாற்றி குடி யரசுத் தலைவரின் நேரடி கண்காணிப் பில் கொண்டு வரப்பட்டது. இதன்படி, டெல்லியின் காவல்துறை, மாநகராட்சி கள், நில உரிமை உட்பட பலவும் மத்திய அரசின் நேரடி கண்காணிப்பில் செயல்பட்டு வருகின்றன. இந்த கண்காணிப்பு பணியை மத்திய அரசுக்காக, டெல்லியின் துணைநிலை ஆளுநர் மேற்கொண்டு, அவ்வப்போது அறிக்கை சமர்ப்பித்து வருகிறார்.

கடந்த ஆகஸ்ட் 16, 1965-ல் மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிக்கையின்படி, யூனியன் பிரதே சங்களின் தலைவர்களான முதல்வர், துணைநிலை ஆளுநர் மற்றும் நிர்வாக அதிகாரி ஆகியோர் குடியரசுத் தலை வர் உத்தரவுடன் செயல்பட வேண்டும் எனக் கூறப்பட்டது. இந்த உத்தரவு, மறுஉத்தரவு வரும் வரை அமலில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டது இதன் பிறகு வெளியான சட்டத் திருத்தத்தில் ஜம்மு-காஷ்மீர், கோவா, புதுச்சேரி, டையூ டாமன், தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி, நாகாலாந்து ஆகிய யூனியன் பிரதேசங்களின் அரசுகளுக்கு விசாரணைக் கமிஷன் அமைப்பதில் சில அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் டெல்லி அரசுக்கு எந்த அதிகாரமும் அளிக்கப்படவில்லை.

1987-ல் நீதிபதி சர்க்காரியா தலை மையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. இது பிறகு நீதிபதி பாலகிருஷ்ணன் தலைமைக்கு மாற்றப்பட்டது. கடந்த 1989-ல் சமர்ப்பிக்கப்பட்ட அதன் அறிக்கையின்படி, ‘டெல்லி, தேசிய தலைநகர் அரசு சட்டம் 1991’ என்பது அமலாக்கப்பட்டு அதற்கு தனி மாநிலஅந்தஸ்து தர இயலாது எனத் தெளிவாக்கப்பட்டது.

ஆனால் டெல்லியில் பாஜக ஆட்சி வந்தபோது, இந்தப் பிரச்சினை மீண்டும் எழுந்தது. இதனால் டெல்லியை தனி மாநிலமாக மாற்றும் மசோதா அதன் சட்டப்பேரவையில் 1993-ல் முதன்முறை யாக நிறைவேற்றப்பட்டது. டெல்லியில் ஷீலா தீட்சித் தலைமையில் தொடர்ந்து 3 முறை ஆட்சிசெய்த காங்கிரஸ் அரசும் 2 முறை தனி மாநிலமாக்கும் மசோதாவை நிறைவேற்றியது.

கடந்த 2013-ல் கேஜ்ரிவால் தலை மையிலான ஆம் ஆத்மி கட்சி அரசு, டெல்லி சட்டப்பேரவையில் லோக்பால் மசோதாவை அறிமுகப்படுத்தியது. அப்போது அந்த மசோதாவுக்கு துணை நிலை ஆளுநர் நஜீப் ஜங்கின் ஒப்புதல் பெறவில்லை என முதல் முறையாக சர்ச்சை கிளம்பியது. எனினும், இந்த மசோதாவை நிறைவேற்ற முடியவில்லை என கேஜ்ரிவால் தனது முதல்வர் பதவியை 49 நாள் ஆட்சிக்கு பிறகு ராஜினாமாசெய்தார். எனவே, அத்துடன் நின்றிருந்த இந்தப் பிரச்சினைமீண்டும் கேஜ்ரிவால் தனி மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைத்த பின் மீண்டும் கிளம்பியது. இதுவே டெல்லி நீதிமன்றத்தில் வழக்காக தொடுக்கப்பட்டு நேற்று அதன் தீர்ப்பு வெளியாகியுள்ளது.

டெல்லி உயர் நீதிமன்ற தீர்ப்பில் தவறில்லை: நீதிபதி கே.சந்துரு கருத்து

டெல்லியில் துணைநிலை ஆளுநருக்கே அதி காரம் உள்ளது என்று டெல்லி உயர் நீதிமன் றம் வழங்கியுள்ள தீர்ப்பில் தவறில்லை என்று சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி கே.சந்துரு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது: டெல்லி உயர் நீதிமன்றம் நேற்று பிறப்பித்த உத்தரவில் அதிர்ச்சிதரக்கூடிய விஷயங்கள் ஏதுமில்லை. மத்திய ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளில் இருக்கக்கூடிய யூனியன் பிரதேங்களுக்கு இருக்கும் அதிகாரத்தைவிட, சற்று கூடுலான அதிகாரம் மட்டுமே டெல்லி அரசுக்கு உள்ளது. டெல்லிக்கு முழு மாநில அந்தஸ்து கொடுக்கப்படாதது மட்டுமில்லாமல், அங்கு சில முக்கிய துறைகளும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில்தான் உள்ளன. டெல்லியைப் பொருத்தவரை அது ஒரு கவுரப்படுத்தப்பட்ட ஒரு நக ராட்சி, அவ்வளவே. அங்கு காவல்துறைகூட மத்திய அரசின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. டெல்லிக்கு முழு மாநில அந்தஸ்து கிடைக்காதவரை இது போன்ற பிரச்சினைகள் இருக்கத்தான் செய்யும். டெல்லி, நாட்டின் தலைநகராக இருப்ப தால், எல்லா மாநிலங்களின் அலுவலங்கள், வெளிநாட்டு தூதரகங்கள் உள்ளன. அதை மாநிலத்தோடு ஒப்பிட முடியாது. அங்கு பல்வேறு நாடுகள், மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் வந்து செல்கின்றனர். அவர்களுடைய பாதுகாப்பையும் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது.

எனவே, டெல்லிக்கு மற்ற மாநிலங்களைப்போல அதி காரம் கொடுக்கலாமா, கூடாதா என்பது விவாதிக்கப்பட வேண்டிய ஒன்று. இருப்பினும், டெல்லி உயர் நீதிமன்றம் நேற்று பிறப்பித்த உத்தரவில் தவறு இல்லை. அதே நேரத்தில், துணைநிலை ஆளுநர் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்துக்கு புறம்பாக செயல்படக்கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in