Last Updated : 04 Mar, 2017 10:36 AM

 

Published : 04 Mar 2017 10:36 AM
Last Updated : 04 Mar 2017 10:36 AM

மணிப்பூரில் இன்று முதல்கட்ட வாக்குப்பதிவு: இரோம் சர்மிளா கட்சி முதல்முறையாக போட்டி

மணிப்பூரில் இன்று முதல் கட்ட தேர்தல் நடைபெறுகிறது.

மணிப்பூரில் மொத்தம் உள்ள 60 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு 2 கட்டங்களாக தேர்தல் அறிவிக் கப்பட்டுள்ளது. இதில் முதல் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கு கிறது. இம்பால் கிழக்கு, இம்பால் மேற்கு, பிஷ்ணுபூர் மற்றும் மலை மாவட்டங்களான சூராசந்த்பூர், கங்போபியில் உள்ள 38 தொகுதி களில் நடைபெறும் இந்த தேர் தலுக்காக 1,643 வாக்குச்சாவடி கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த முதல் கட்ட தேர்தலில் 168 வேட்பாளர்கள் போட்டியிட் டுள்ளனர். இந்தத் தேர்தலில் ஒட்டுமொத்த நாட்டின் கவனமும் சமூக ஆர்வலரான இரோம் சர்மிளா மீது தான் உள்ளது. ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தை வாபஸ் பெறக் கோரி 16 ஆண்டுகால மேற்கொண்டிருந்த உண்ணாவிரதத்தைக் கைவிட்டு, மக்கள் மறுமலர்ச்சி மற்றும் நீதி கூட்டமைப்பு என்ற புதிய கட்சியை தொடங்கி முதல்முறையாக அரசியல் களத்தில் குதித்துள்ளார். இவரது கட்சி சார்பில் 3 வேட் பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.

உ.பி.யில் 6-ம் கட்டம்

உத்தரப் பிரதேசத்தில் 49 சட்டப் பேரவை தொகுதிகளுக்கு இன்று 6-ம் கட்ட தேர்தல் நடைபெற வுள்ளது. 635 வேட்பாளர்களின் தலையெழுத்தை 1.72 கோடி வாக்காளர்கள் தீர்மானிக்க வுள்ளனர்.

வாக்குப்பதிவு நடைபெறவுள்ள மாவோ, கோரக்பூர், மகராஜ்கன்ஞ், குஷிநகர், தியோரியா, அசம்கர் மற்றும் பாலியா ஆகிய மாவட்டங் களில் பலத்த பாதுகாப்பு ஏற் பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இம்மாவட்டங்களில் மொத்தம் 17,926 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங்கின் நாடாளுமன்ற தொகுதியான அசம்கரில் மொத்தம் 10 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. கடந்த 2012-ல் நடந்த தேர்தலின் போது, இதில் 9 தொகுதிகளில் சமாஜ்வாதி வெற்றிப் பெற்றது. இதனால் இந்த முறையும் அசம்கரின் மீதே அனைவரது பார்வையும் படிந்துள்ளது. இந்த முறை சமாஜ்வாதி சார்பில் 40 தொகுதிகளில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். அதன் கூட்டணி கட்சியான காங்கிரஸ் 9 இடங்களில் போட்டியிடுகிறது. பாஜக சார்பில் 45 தொகுதிகளிலும், அதன் கூட்டணியான அப்னா தளம் சார்பில் ஒரு தொகுதி யிலும் வேட்பாளர்கள் நிறுத் தப்பட்டுள்ளனர். மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி 49 தொகுதி களிலும் போட்டியிடுகிறது.

பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்து பாஜகவுக்கு தாவிய சுவாமி பிரசாத் மவுரியா (பட்ரவுனா), பாஜகவின் முன்னாள் மாநிலத் தலைவர் சூர்ய பிரதாப் சஹி (பதர்தேவா), முன்னாள் ஆளுநர் ராம் நரேஷ் யாதவின் மகனான சமாஜ்வாதியின் ஷ்யாம் பகதூர் யாதவ் (பல்பூர் பவாய்) ஆகியோர் முக்கிய வேட்பாளர்களாக உள்ளனர்.

தேர்தல் நடைபெறும் தொகுதிகளுக்கு வந்து சேர்ந்துள்ள மத்திய துணை ராணுவப் படையினர் பதற்றமான பகுதிகளில் கொடி அணிவகுப்பு நடத்தினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x