ராஜினாமாவுக்கு தயாராகும் கிரண்குமார் ரெட்டி: சீமாந்திரா எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனை

ராஜினாமாவுக்கு தயாராகும் கிரண்குமார் ரெட்டி: சீமாந்திரா எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனை
Updated on
1 min read

ஆந்திரத்தைப் பிரித்து தெலங்கானா தனி மாநிலம் அமைக்க வழி செய்யும் மாநில மறுசீரமைப்பு மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிரண்குமார் ரெட்டி முதல்வர் பதவியை இன்று ராஜினாமா செய்வார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

சீமாந்திரா எம்.எல்.ஏ.க்களுடன் கிரண்குமார் ரெட்டி ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனை கூட்டத்திற்குப் பின்னர் பத்திரிகையாளர்களை சந்திக்கும் முதல்வர் கிரண்குமார், ராஜினாமா தொடர்பாக பேசுவார் எனத் தெரிகிறது.

பத்திரிகையாளர்கள் சந்திப்புக்குப் பின், ஆளுநரை நேரில் சந்தித்து ராஜினாமா கடிதத்தை அவர் வழங்கயிருப்பதாக கூறப்படுகிறது.

இருப்பினும், புதிய கட்சி தொடங்குவது குறித்து கிரண்குமார் ரெட்டி எடுத்துள்ள முடிவு தொடர்பான தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in