

மேற்கு வங்க முதல்வர் மம்தா பனர்ஜியின் தலையை வெட்டிக் கொண்டு வருபவருக்கு ரூ 11 லட்சம் பரிசு தொகை வழங்கப்படும் என்று பாஜக இளைஞரணி தலைவர் யோகேஷ் வர்ஷ்னே பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மேற்வங்கத்தில் பிர்பும் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஹனுமன் ஜெயந்தி பேரணியில் கலந்துகொண்ட பொதுமக்களுக்கும் போலீஸார்க்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனையடுத்து சட்ட ஒழுங்கை நிலைநாட்ட போலீஸார் தடியடி நடத்தினர்.
இதுகுறித்து யோகேஷ் வர்ஷ்னே கூறும்போது, "மம்தாவின் அரசு மக்கள் மீது தடியடி நடத்துகிறது. யாராவது சிவப்பு நிற சட்டையும், பேண்ட்டும் அணிந்திருந்தால் அவர்களை போலீஸார் கொடூரமாக தாக்குகின்றனர். மம்தா முஸ்லிம்களுக்காக இஃப்தார் நோன்புக்கு ஏற்பாடு செய்கிறார். முஸ்லிம்களுக்காக வாதாடுகிறார். நான் அவரிடம் ஒன்றைக் கேட்க விரும்புகிறேன் இந்துக்கள் மனிதர்கள் இல்லையா? மம்தாவிடம் மனிதாபிமானம் இருந்தால் இந்துக்களை இவ்வாறு தாக்கியிருக்க மாட்டார். யாரவது மம்தாவின் தலையை வெட்டிக் கொண்டு வந்தால், அந்த நபருக்கு 11 லட்சம் பரிசுத் தொகை அளிப்பேன்" என்று கூறினார்.