Last Updated : 17 Jul, 2016 11:29 AM

 

Published : 17 Jul 2016 11:29 AM
Last Updated : 17 Jul 2016 11:29 AM

இந்தியா-பாகிஸ்தான் இடையே காஷ்மீர் ஒரு பிரச்சினையே இல்லை: மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் தகவல்

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக் கும் இடையே காஷ்மீர் ஒரு பிரச்சினையே இல்லை என்று பிரதமர் அலுவலக இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் நேற்று தெரிவித்தார்.

காஷ்மீரில் ஹிஸ்புல் முஜாஹி தீன் தீவிரவாத அமைப்பின் முக்கிய தளபதி புர்ஹான் வானி என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப் பட்டார். இதையடுத்து, கடந்த ஒரு வாரமாக அங்கு வன்முறைச் சம்பவங்கள் நடந்து வரும் நிலை யில், அங்கு சென்றுள்ள அமைச்சர் ஜிதேந்திர சிங், ஜம்முவில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

இந்தியாவுக்கும் பாகிஸ் தானுக்கும் இடையே காஷ்மீர் விவகாரத்தில் பிரச்சினை எதுவும் இல்லை. இதுதொடர் பாக ஏற்கெனவே தெளிவாக கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, கடந்த 1994-ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் ஒருமனதாக ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதில், “பாகிஸ்தான் சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ள காஷ்மீரின் ஒரு பகுதியை எப்படி மீட்பது என்பது மட்டும்தான் இரு நாடுகளுக்கும் இடையே நீடிக்கும் பிரச்சினை” என கூறப்பட்டுள்ளது.

காஷ்மீர் விவகாரம் உள்நாட்டு பிரச்சினை. இதில் தலையிட பாகிஸ்தான் உட்பட வேறு எந்த ஒரு நாட்டுக்கும் உரிமை கிடையாது.

தங்கள் நாட்டின் பலுசிஸ்தான், பால்டிஸ்தான் பகுதிகளில் நடைபெறும் மனித உரிமை மீறல்களைத் தடுக்க அந்த நாடு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.

ஆளுநருடன் சந்திப்பு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்எல்ஏ எம்.ஒய்.தாரிகமி, சுயேச்சை எம்எல்ஏ ஹகீம் யாசீன் மற்றும் முன்னாள் அமைச்சர் ஜி.எச்.மிர் ஆகியோர் காஷ்மீர் ஆளுநர் என்.என்.வோராவை நேற்று சந்தித்துப் பேசினர்.

இதுகுறித்து தாரிகமி கூறும் போது, “காஷ்மீரில் நிலவும் சூழ் நிலை குறித்து ஆளுநருடன் விரி வாக ஆலோசனை நடத்தி னோம். குறிப்பாக, போராட்டக் காரர்களுக்கு எதிராக போலீஸார் ஆயுதங்களை பயன்படுத்துவது மற்றும் அப்பாவி மக்களை கைது செய்வது பற்றி எங்களது கவலையை தெரிவித்தோம்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x