காஷ்மீரில் ஊரடங்கு உத்தரவு: வன்முறையில் ஒருவர் பலி; 24 பேர் காயம்

காஷ்மீரில் ஊரடங்கு உத்தரவு: வன்முறையில் ஒருவர் பலி; 24 பேர் காயம்
Updated on
1 min read

ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாதி புர்ஹான் வானி கொல்லப்பட்ட தைத் தொடர்ந்து காஷ்மீரில் நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்து இதுவரை 36 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று ஊரடங்கு உத்தரவை யும் மீறி நடத்தப்பட்ட போராட்டத் தில் வன்முறை நிகழ்ந்து ஒருவர் பலியானார் 25 பேர் காயமடைந்தனர்.

காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதி யில் கடந்த ஒரு வாரமாக நடந்து வரும் வன்முறையில் 3,100-க்கும் அதிகமானவர்கள் காயமடைந் துள்ளனர். நேற்று வெள்ளிக்கிழமை தொழுகைக்கு அதிக மக்கள் கூடு வார்கள் என்பதால், புதிதாக வன் முறைகள் நிகழக்கூடும் என எதிர் பார்த்து தடையுத்தரவு பிறப்பிக் கப்பட்டது.

“சட்டம் ஒழுங்கைப் பேண, முன் னெச்சரிக்கை நடவடிக்கையாக காஷ்மீரின் 10 மாவட்டங்களில் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டது. வெள்ளிக்கிழமை தொழுகையைப் பயன்படுத்தி, சிலர் வன்முறை யைத் தூண்ட முயற்சி செய்யக் கூடும் என்பதால் இம்முடிவு எடுக்கப்பட் டது” என காவல் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

வதந்திகளைத் தடுப்பதற்காக, தொலைத்தொடர்பு, இணையதள சேவைகளும் துண்டிக்கப்பட் டிருந் தன. எனினும், தடையுத்தரவை மீறி பாராமுல்லா, சோபூர் டவுன், ரபியா பாத், பண்டிபோரா, குல்காம், புலவாமா பகுதிகளில் போராட்டம் நடைபெற்றது. இதில் ஏற்பட்ட வன்முறையில், 10 பொதுமக்கள், மூன்று பாதுகாப்பு படைவீரர்கள் காயமடைந்தனர்.

டெலினாவில் நடைபெற்ற கல்வீச்சு தாக்குதலில் பாதுகாப்பு படையினரின் ரோந்து வாகனம் தாக்கப்பட்டது. டிரக்முல்லா பகுதியில் பாதுகாப்பு படை யினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் மூன்று பேர் காயமடைந்தனர். இதில் முஷ்டாக் அகமது கனி உயிரிழந்தார்.தெற்கு காஷ்மீரின் குல்காம் மா வட்டத்தில் கல்வீச்சின்போது, யாரிபோரா காவல் நிலையம் மீது வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. மேலும் துப்பாக்கிச் சூடும் நடத் தப்பட்டது இதில், 6 காவலர்கள் காயமடைந்தனர்.

காஷ்மீர் வன்முறை நிலவரம் உட்பட, உள் நாட்டுப் பாதுகாப்பு நிலவரம் குறித்து மத்திய உள் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

உள்நாட்டு பாது காப்பு நிலவரங்கள் குறித்து அதி காரிகள் ராஜ்நாத்திடம் விளக்கி னர். அமர்நாத் யாத்திரை செல்லும் பயணிகளுக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்து கொடுக்கும் படி ராஜ்நாத் சிங் அறிவுறுத்தினார்.

கேரளாவில் காணாமல் போன 20 இளைஞர்களில், குறைந்தது 11 பேர் சிரியா சென்று ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் சேர்ந் துள்ளது குறித்தும் விவாதிக்கப் பட்டது. பிரான்ஸின் நைஸ் நகர தாக்குதலைப் போன்று இந்தியா வில் தாக்குதல்கள் நடைபெறாமல் தடுப்பதற்குத் தேவையான நட வடிக்கைகள் குறித்தும் இக்கூட்டத் தில் விவாதிக்கப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in