

அரசின் நலத்திட்டங்களைப் பெற ஆதார் எண் தேவை என்பதை கட்டாயமாக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
ஆதார் தொடர்பான சர்ச்சையில் உச்ச நீதிமன்றத்தில் ஏகப்பட்ட மனுக்கள் குவிந்து வருகின்றன. இந்நிலையில் ஆதார் தொடர்பான ஒரு வழக்கு விசாரணையில் உச்ச நீதீமன்ற அமர்வு அரசின் நலத்திட்டங்களை மக்கள் பெறுவதற்கு அவர்களிடம் ஆதார் எண் அவசியம் என்று கட்டாயப்படுத்தக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
ஆனால், வங்கிக் கணக்கு தொடங்குவதற்கும் பிற திட்டங்களுக்கும ஆதார் எண் அவசியம் என்பதை தடை செய்ய முடியாது என்று நிராகரித்தது உச்ச நீதிமன்றம்.
மேலும் ஆதார் தொடர்பான வழக்குகளை விசாரிக்க 7 நீதிபதிகள் கொண்ட அமர்வு நியமிக்கப்பட வேண்டும், ஆனால் அது இப்போதைக்குச் சாத்தியமில்லை என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.