

ரூ.200 கோடி செலவில் நாடு முழுவதும் அதிநவீன தொழிற் பயிற்சி மையங்களை தொடங்க மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியின் “மேக் இன் இந்தியா” திட்டத்தின் சிறப்பாக செயல்படுத்த உதவும் ஒரு நடவடிக்கையாக இது கருதப்படுகிறது. அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் இந்த அதிநவீன தொழிற்பயிற்சி மையங்கள் தொடங்கப்படவுள்ளன. மொத்தம் 27 அதிநவீன தொழிற்பயிற்சி மையங்கள் தொடக்க திட்டமுள்ளது. முதல் கட்டமாக 12 மையங்கள் தொடங்கப்படவுள்ளன. இதன் மூலம் மொத்தம் 9200 தொழில் முனைவோருக்கு சிறப்பான பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளன.
தொழில்துறையில் நவீன தொழில்நுட்பத் திறன், மனித வளம், உற்பத்தி வேகம், சர்வதேச தரம் ஆகியவற்றை அதிகரிக்க வேண்டுமென்று பிரதமர் சுட்டிக் காட்டியுள்ளதை மையமாகக் கொண்டு இத்திட்டம் செயல்படுத்தப்பட இருக்கிறது.